விடுமுறை நாட்களில் நடத்தப்படும்
பயிற்சிகளுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று
ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இது குறித்து கூடுதல் முதன்மை கல்வி
அலுவலரிடம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர்
சுடலைமணி மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த கல்வி ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி
இயக்கம் சார்பில் பள்ளி வேலை நாட்களில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி
ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் குறுவள மைய பயிற்சி மற்றும் 10 நாட்கள் வட்டார
வள மைய அளவில் பயிற்சி, ஆண்டுக்கு 20 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அதிகமான பயிற்சிகள் வழங்கப்படுவதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படும்
என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இப்பயிற்சி நாட்கள் ஆண்டுக்கு 7 நாட்களாக
குறைக்கப்பட்டுள்ளது.ஆனால் அதே வேளையில் பள்ளி விடுமுறை நாட்களில்
பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் விடுமுறை நாட்களில்
பயிற்சியில் கலந்து கொள்ளும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும்
ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. அரசு
ஊழியர்கள் விடுமுறை நாளில் பணியாற்றினால் அவர்களுக்கு ஈடு செய்யும்
விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது.தற்போது விடுமுறை
நாட்களில் பயிற்சியில் பங்கேற்கும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்
பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் இந்த சலுகை வழங்க வேண்டும். 6 மாதங்கள் வரை
இந்த ஈடு செய் விடுப்பை அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...