Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நலத்துறை பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்" துவக்க உத்தரவு


         அரசு பள்ளிகளில், வரை படங்கள் வாங்கி மாட்டுவதற்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், "ஸ்மார்ட் வகுப்பறை" துவக்கவும், முதல்வர், ஜெயலலிதா, அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார்.

      பள்ளி மாணவர், தாங்கள் கற்கும் கல்வியுடன், பொது அறிவான, தாங்கள் வசிக்கும் மாவட்டம், மாநிலம், நாடு குறித்த விவரங்களை, நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம். எனவே, பள்ளிக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும், 3,246 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை உள்ள, 48,247 வகுப்பறைகள்; தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள, ஒரு லட்சம் வகுப்பறைகள் என, மொத்தம், 1.48 லட்சம் வகுப்பறைகளுக்கு, தேசிய வரைபடம், தமிழ்நாடு வரைபடம், சம்மந்தப்பட்ட மாவட்ட வரைபடம் என, மூன்று வரைபடங்கள் வாங்கி மாட்டும்படி, முதல்வர், ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். இதற்காக, 11.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

        மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் வழியாக, கல்வி கற்பித்து, அவர்களின் புரிதல் திறனை மேம்படுத்த, &'ஸ்மார்ட் வகுப்பறை&' என்ற புதிய தொழில்நுட்பத்தை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் இயங்கும், 100 மேல்நிலைப் பள்ளிகளில், இந்த ஆண்டு அறிமுகப்படுத்த, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

          இத்திட்டத்தின் கீழ், இப்பள்ளிகளில், ஏற்கனவே இருக்கும் வகுப்பறைகளில், ஏதேனும் ஒரு வகுப்பறை, &'ஸ்மார்ட் வகுப்பறை&' ஆக மாற்றி அமைக்கப்படும். இத்திட்டத்தின்படி கல்வி கற்பிக்க, ஆர்வமுள்ள, இத்துறைப் பள்ளிகளில், ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்களில், ஒரு பள்ளிக்கு, இரண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும், &'ஸ்மார்ட் வகுப்பறை&' துவக்குவதற்கு தேவையான கம்ப்யூட்டர் உள்ளிட்ட அறிவியல் சாதனங்கள் வாங்க, 100 பள்ளிகளுக்கு, 5.05 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive