முதுகலை ஆசிரியர் நியமனத்தில், தமிழ் அல்லாத
இதர பாடங்களுக்கான, தேர்வு முடிவுகளை, நேற்று இரவு, டி.ஆர்.பி.,
வெளியிட்டது. கடந்த, ஜூலை, 21ம் தேதி, முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி
தேர்வு நடந்தது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள,
2881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நடத்தப்பட்ட இத்தேர்வில், 1.60
லட்சம் பேர் பங்கேற்றனர். இதன் முடிவுகள், பல நாட்களுக்கு முன்பே தயாராகின.
எனினும், தமிழ் பாட கேள்வித்தாளில், 47 கேள்விகளில், அச்சு பிழை ஏற்பட்ட
விவகாரம் காரணமாக, தேர்வு முடிவுகள் வெளியாவது தள்ளிப் போனது.
இனியும் தாமத்தால், பல்வேறு சிக்கல் எழும் என்ற
காரணத்தால், நேற்று இரவு,www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் நேற்று
இரவு தமிழ் அல்லாத இதர பாடங்களின் தேர்வு முடிவுகளை, டி.ஆர்.பி.,
வெளியிட்டது. தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்களின் முடிவுகளும்,
மதிப்பெண்களுடன் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில், ஒரு
பணியிடத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு
தகுதியான தேர்வர்களின் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட உள்ளது.
dinamalar nalla seithi
ReplyDelete