தொடக்க பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர்
தகுதித் தேர்வு முடிவுக்காக காத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம் என, மத்திய
தீர்ப்பாயம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
காரைக்கால் விரிவுரையாளர் சங்க பொதுச்செயலாளர்
ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: "பள்ளிக் கல்வித்துறையில் 171 தொடக்க
பள்ளி ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த அக். 5ம் தேதி
அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விண்ணப்பிக்கும் போது, ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழையும் கட்டாயமாக இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த ஆக. 17ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர்.விண்ணப்பிக்க 4ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தால், தகுதித் தேர்வு சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பங்களை கல்வித் துறை பெற்றுக் கொள்ள வேண்டும் என முறையிடப்பட்டது.
ஆனால், இக்கோரிக்கை ஏற்றகப்படவில்லை.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாகும் தேதியை அனுசரித்து,
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மாற்றப்படவுமில்லை.ஆசிரியர் தகுதித் தேர்வு
எழுதி முடிவுக்காக காத்திருக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த ராஜலெட்சுமி
மற்றும் 9 பேர் சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஆசிரியர் தகுதி தேர்வு
முடிவுவெளிவருவதற்கு முன், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளுக்கு முன்பே
கல்வித்துறை ஏற்றுக் கொண்டு பரிசீலிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.வழக்கை
விசாரித்த, மத்திய நிர்வாக தீர்ப்பாய நீதிபதிகள் இளங்கோ,பிரபாகன் ஆகியோர்,
மனுதாரரின் தொடக்க பள்ளி ஆசிரியர் பணி நியமனத்திற்கான விண்ணப்பங்களை
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை பெற்றுக் கொள்ள வேண்டும் என கடந்த 30ம் தேதி
இடைக்கால உத்தரவுபிறப்பித்தனர். வழக்கில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
சீனிவாசன், அரசு சார்பில் வழக்கறிஞர் செய்யது முஸ்தபா ஆஜராகினர். இவ்வாறு
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...