Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுகலை தமிழ் தேர்வு ரத்து எதிரொலி: டி.ஆர்.பி., நாளை அவசர ஆலோசனை


           முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை காலை ஆலோசனை நடத்துகின்றனர்.

           ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித் தேர்வை நடத்தியது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதில், அதிகபட்சமாக, தமிழ் பாட தேர்வை, 33,237 பேர் எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட, டி.ஆர்.பி., தயாரான நிலையில், தமிழ்பாட கேள்வித்தாளில், 47 கேள்விகள், பிழையுடன் இருந்ததாக கூறி, மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர், உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய தமிழ் பாட தேர்வை, ரத்து செய்து, புதிதாக, வேறு தேர்வை நடத்த கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, கோர்ட் தீர்ப்பின்படி, தமிழ் பாட தேர்வர்களுக்கு, புதிய தேர்வை நடத்துவதா, அல்லது, மேல் முறையீடு செய்வதா என்பது குறித்து விவாதிக்க, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.

           இந்த விவகாரம் குறித்து, தமிழக அரசின் ஆலோசனையை பெற்று, அதனடிப்படையில், முடிவு எடுக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. டி.ஆர்.பி., எந்த முடிவை எடுத்தாலும், முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமனம், தள்ளிப்போகும். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பாதிக்காத வகையில், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், தற்போதைய சூழல் காரணமாக, தமிழ் ஆசிரியர் நியமனம், தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.




11 Comments:

  1. thavaru nadakkallam. nadappathe thavaru endral god only help us.

    ReplyDelete
  2. சென்ற வருடம் தேர்வு முடிவு வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பிறகு இறுதி பட்டியல் விரைவில் வரும் என்று கத்திருந்த நிலையில் வினாக்களை மீண்டும் மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று வழக்கு தொட்ர்ந்து 01.10.2012 அன்று அதிரடி தீர்ப்பு இதே மதுரை நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. இதே போன்று 01.10.2013 ல் தமிழ் பாட தேர்வர்களுக்கு மறு தேர்வு தீர்ப்பு.

    அன்று இறுதி கட் ஆப் மதிப்பெண்ணில் உள்ளவர்கள் பல பேர் பாதிக்கப்பட்டனர்.
    இன்று எவருக்கும் பாதிப்பு ஏற்ப்படாத வண்ணம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    மேல் முறையீடு செய்ய தேவைப்படும் காலத்தில் ஒரு தேர்வை நடத்தி முடிவை வெளியிட்டடலாம்!

    தேர்வு வாரியம் அவசர ஆலோசனையை மற்ற பாட தேர்வு முடிவு வெளியிடுவதில் காட்டினால் நல்லது!

    ReplyDelete
  3. When published TET Result !!!

    ReplyDelete
  4. When published TET Result !!!

    ReplyDelete
  5. When published TET Result !!!

    ReplyDelete
  6. hai friends,what is the highest mark in pg botany among your friends or your knowledge

    ReplyDelete
  7. hai friends,what is the highest mark in pg botany among your friends or your knowledge

    ReplyDelete
  8. when other subject result?

    ReplyDelete
  9. தாவரவியல் கட் ஆப் மதிப்பெண் எதிர்பார்ப்பு
    100 க்கு மேல் 40 பேர்
    99 முதல் 98 வரை 50 பேர்
    97 முதல் 96 வரை 50 பேர்
    95 முதல் 94 வரை 50 பேர்

    இது சென்ற ஆண்டு வெளியிடபட்ட பட்டியலோடு ஓப்பிடப்பட்டு தோராயனமாக தீர்மாணிக்கப்பட்டுள்ளது

    இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் தங்கள் கருத்தினை தெரிவிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. Hi friend which district r u...

      Delete
  10. THODARNTHU ONLINE WORK ENDRU PALLIGALIL QUARTERLY LEAVE -KKUL KADUM MANA ULAICHALUKKU THALLI IRUKKIRARGAL. Ithanal HM-kku mattum mana ulaichal illai.Computer teachers-kku than bayangar MANA ULAICHAL. EMIS, SCHOLARSHIP, E-REGISTER, SSLC, HSC ONLINE EXAM ENTRY, MONTHLY REPORTS ABOUT NALA THITTANGAL ETC., ENDRU INNUM NIRAIYA........ IVAI ANAITHUM COMPUTER TEACHERS THALAIYIL.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive