மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், கல்வி தரத்தை
மேம்படுத்தும் நோக்கில், 60 வகையான ஆராய்ச்சி திட்டங் களை, அடுத்த இரு
ஆண்டுகளில் செயல்படுத்த உள்ளது. இதற்காக, துறை இயக்குனர் தலைமை யில், 13
பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு ஆண்டு களாக, துறையின் முக்கிய நோக்கத்தை நிறைவேற்றும்
வகையில், படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாடப்
புத்தகங்களை தயாரிக்கும் பணியை, இந்த துறை செய்தது. தற்போது, பிளஸ் 1,
பிளஸ் 2 பாடத்திட்டங்களை உருவாக்கும் பணியையும், இந்த துறை செய்து
முடித்துள்ளது. இந்நிலையில், கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், 60
வகையிலான ஆராய்ச்சி திட்டங்களை, நடப்பு ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும்
மேற்கொள்வதற்கு, துறை இயக்குனர், கண்ணப்பன், நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆசிரியரின் கற்பித்தல் பணியை மேம்படுத்துவது, நடுநிலைப் பள்ளி
மாணவர்களுக்கு, செய்யுளை, பாடி கற்பிப்பதன் வழியாக, கற்கும் திறனை
மேம்படுத்துவது, குழந்தைகள் கற்றல் திட்டத்தில், கிராமப்புற பெற்றோரின்
பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், ஆராய்ச்சி திட்டங்கள்
மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக, இயக்குனர், கண்ணப்பன் தலைமை யில், 13 பேர்
கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பேராசிரியர்கள் உட்பட பலர்
இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, இயக்குனர், கண்ணப்பன் கூறுகையில், &'&'ஆசிரியர்
கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி திட்டங்களில்
ஈடுபடுகின்றனர். கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், ஒரு தலைப்பை தேர்வு
செய்து, அது தொடர்பாக, முழுமையாக ஆய்வு செய்து, ஆராய்ச்சி அறிக்கையை தயார்
செய்வர்,&'&' என்றார்.
இந்த ஆராய்ச்சி திட்டங்கள் முழுமை அடைந்து, அவைகளை, பள்ளிகளில்
அமல்படுத்தும் போது, கல்வித்தரம், படிப்படியாக உயரும் என, அதிகாரிகள்
நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...