Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் தாமத வருகை

 
            ஆசிரியர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகிறார்களா என்பதைக் கண்டறிய மாவட்டத்தில் 300-க்கும் அதிகமான அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

        தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் தினமும் காலை 9.10 மணிக்கு தொடங்கி மாலை 4.10 மணிக்கு முடிவடைகிறது. ஆனால் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர், காலையில் வகுப்புகள் தொடங்கிய பின்னர் பணிக்கு வந்துவிட்டு, மாலையில் வகுப்புகள் முடிவதற்கு முன்னதாகவே சென்று விடுவதாகவும் அதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அரசுக்குப் புகார்கள் சென்றன.

           இந்த புகார்களைத் தொடர்ந்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

              அதன் பேரில் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர்கள் அடங்கிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

         இந்தக் குழுவினர் எந்தெந்த நாளில் எந்தெந்தப் பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பது பற்றி குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு முந்தைய நாளில் செல்போன் எஸ்எம்எஸ் மூலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிடுகிறார்.

               அதன்படி அந்தக் குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு காலையில் 9 மணிக்கு முன்னதாகவே செல்கிறார்கள், அப்போது விடுமுறைக் கடிதம் கொடுக்காத, காலை 9.10 மணிக்குள் பணிக்கு வராத ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கு வந்துவிட்டு மாலை 4.10 மணிக்கு முன்னதாகவே பள்ளியை விட்டுச் சென்ற ஆசிரியர்களுக்கும் வருகைப் பதிவேட்டில் பணிக்கு வரவில்லை என குறிப்பிடுகின்றனர். இந்த ஆய்வின் போது ஒரே ஆசிரியர் தொடர்ந்து 3 முறை பணிக்கு வராமல் இருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

           கடலூர் மாவட்டத்தில் இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் 180 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

               கடந்த மாதம் இந்தக் குழுவினர் நடத்திய திடீர் ஆய்வின் போது 39 ஆசிரியர்கள் பணிக்கு காலதாமதமாக வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து 2-வது முறையாக அண்மையில் இக்குழுவினர் குக்கிராமங்களில் உள்ள 300-க்கும் அதிகமான பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

               இந்த ஆய்வின் அறிக்கை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் பணிக்கு நேரம் தவறி வந்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.




3 Comments:

  1. வரவேற்கத்தக்கது

    ReplyDelete
  2. Pallikku sariyana nerathukku vanthu, classukke pogatha teachers - i enna seirathu

    ReplyDelete
  3. Kalvinilai mattrum kalvi tharam patri arasangathirku kavalai illai aanaal aasiriyarkal meethu evvalavu akkarai parungal

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive