தமிழ்நாடு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்ககம்
இணைந்து, தொடக்கப் பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு துவக்க நிலை,
உயர்நிலை கற்பித்தல் குறித்த சிறப்பு பயிற்சிகளை அளிக்கிறது.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனைவருக்கும் கல்வி
இயக்கத்திற்கு ஒதுக்கிய நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில்
கொண்டும், தொடர் பயிற்சியால் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்கவும்
ஆசிரியர்களுக்கான பயிற்சியை குறைக்க திட்டமிட்டனர். மாதந்தோறும் 3 நாட்கள்
மட்டுமே பயிற்சி அளிக்கப்படும் என, அனைவருக்கும் கல்வி இயக்கக நிர்வாகம்
தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...