இன்டர்னல் மதிப்பெண்கள் சரியான முறையில்தான் வழங்கப்படுகிறதா என்பதை
சோதனை செய்யும் தனது செயல்பாட்டை சி.பி.எஸ்.இ., தொடங்கியுள்ளது.
இதன்பொருட்டு, இன்டர்னல் மதிப்பெண்கள் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது
என்பதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படும்.
CCE முறையின் கீழ், மாணவர்களின் திறன்கள், பார்மேடிவ் (practicals,
projects etc..,) மற்றும் சம்மேடிவ் (theory paper) ஆகிய இரு முறைகளின்
கீழ் சோதிக்கப்படுகின்றன. பார்மேடிவ் சோதனையில், இந்தி, ஆங்கிலம், கணிதம்,
அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றில் EA சேகரிக்கப்படும்.
இத்தகைய பகுப்பாய்வுகள் தொடர்பாக CBSE வட்டாரங்கள் கூறுவதாவது:
மாணவர்களின் திறன்களை சிறப்பான முறையில் பகுப்பாய்வு செய்வதே, எந்த ஒரு
கல்வித்திட்டத்தின் வெற்றிக்கும் முக்கிய காரணியாகும். நடைமுறை சார்ந்த,
எளிதான மற்றும் அழுத்தமற்ற பகுப்பாய்வுதான், மாணவர்களின் ஆளுமைத்திறன்
மேம்பாட்டிற்கு உதவும்.
EA திட்டத்தின்படி, சோதனை மேற்கொள்ளப்படுவதற்கான CBSE பள்ளிகள்,
பிராந்திய அலுவலகத்தால் மேலோட்டமான முறையில் தேர்வு செய்யப்படுகின்றன.
தேர்வு செய்யப்பட்ட பள்ளிகள், 15 பதில் தாள்கள்(answer sheets) மற்றும்
மதிப்பாய்வு விபரங்களை, 5 பிரதான பாடங்களுக்காக அனுப்ப வேண்டும்.
கிரேடுகளின் அடிப்படையில் இந்த பதில் தாள்கள் பிரிக்கப்படும்.
மேல்நிலை கிரேடு, இடைநிலை கிரேடு மற்றும் கீழ்நிலை கிரேடு என்ற
வகைப்பாடுகளின் கீழ், அந்த 15 பதில் தாள்களும், ஐந்து ஐந்தாக
பிரிக்கப்படும். இந்த பதில் தாள்கள் அனைத்தும் சேர்ந்து EA -க்கள் என்று
அழைக்கப்படுகின்றன.
EA -க்கள் மற்றும் அளிக்கப்படும் மதிப்பெண்கள் ஆகியவை, பாட மதிப்பீட்டு
நிபுணர்களால் சரிபார்க்கப்படுகின்றன மற்றும் பிராந்திய அளவில் CBSE -ஆல்
பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் விபரங்கள்,
CBSE வலைதளத்தில் வெளியிடப்படும்.
பிராந்திய மதிப்பீட்டாளர்கள் தரும் அறிக்கைகளின் அடிப்படையில்,
பள்ளிகளின் இன்டர்னல் மதிப்பெண் வழங்கும் தரநிலைகள் கணக்கில்
கொள்ளப்படுகின்றன. மேலும், இந்த விஷயத்தில் ஏதேனும் மேம்பாடு தேவையென்றால்,
CBSE அது தொடர்பான ஆலோசனை வழங்கும். நவம்பர் 15ம் தேதிக்குள் தங்களின் EA
-க்களை, பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும்படி CBSE பள்ளிகள்
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...