"கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 29
ஆயிரம் மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியில் ஜாதி சான்றிதழ்
வழங்கப்பட்டுள்ளது," என, தமிழக வருவாய் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங்
பேடி கூறினார்.
கலெக்டர் ராஜேஷ் முன்னிலையில் மின் ஆளுமை திட்டத்தின் கீழ்
கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்துறை, சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை
மற்றும் நில அளவைத்துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து ககன்தீப்
சிங் பேடி ஆய்வு செய்த பின் நிருபர்களிடம் கூறியதாவது:
"வருவாய் துறையில் ஜாதிச்சான்றிதழ்கள், வருமான
சான்றிதழ்கள், குடியிருப்பு சான்றிதழ்கள் ஆகியவை மக்கள் கணினி மையங்கள்
மூலம் பொதுமக்கள் விண்ணப்பித்து பெறலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மின்
ஆளுமை திட்டத்தின் கீழ் வருவாய் துறையில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 430
சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் கணினி மையத்தில் பொதுமக்கள் சான்றிதழ் கோரி
விண்ணப்பித்த உடன் வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ.,கள் மற்றும் மண்டல துணை
தாசில்தார்கள் ஆகியோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை ஆய்வு செய்து
எலக்ட்ரானிக் கையொப்பம் இட்டு மீண்டும் மக்கள் கணினி மையத்திற்கு
விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையில் ஆறாம் வகுப்பு முதல்
எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு வரை சாதிச்சான்றிதழ்கள் அந்தந்த பள்ளிகளில்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே சான்றிதழ்கள்
வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 29 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள்
வழங்கப்பட்டுள்ளது." இவ்வாறு கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...