Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புல்பிரைட் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

 
          அமெரிக்க ஐக்கிய நாடுகள் - இந்திய கல்வி பவுண்டேஷன்(USIEF) என்ற அமைப்பு, ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிடமிருந்து, கற்பித்தல் ப்ரோகிராமில், The 2014 Fulbright Distinguished விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 20.

         இந்த ப்ரோகிராம், சிலி, பின்லாந்து, இந்தியா, இஸ்ரேல், மெக்சிகோ, மொராக்கோ மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து, ஆசிரியர்களை, ஒரு செமஸ்டர் காலகட்டத்திற்கு அமெரிக்காவிற்கு வரவழைக்கும்.

              இந்த விருதுக்கு, ஆசிரியர்கள் மட்டுமின்றி, ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளி அளவிலான நூலக மீடியா ஸ்பெஷலிஸ்டுகள், வழிகாட்டு கவுன்சிலர்கள், பாடத்திட்ட ஸ்பெஷலிஸ்டுகள், சிறப்பு கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்சியாளர்கள் ஆகியோரும் விண்ணப்பிக்கலாம். இதுதவிர, வகுப்பறை கற்பித்தலில், குறைந்தபட்சம் தங்களின் 50% நேரத்தை செலவழித்த அனுபவமுள்ள நிர்வாகிகள் மற்றும் அகடமிக் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

            தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், US host university&'s graduate school of education -ல், அடுத்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மத்தியிலிருந்து, டிசம்பர் மத்திய காலம் வரை இருக்க வைக்கப்படுவார்கள். Host university, பலதரப்பட்ட பரந்த அளவிலான வளங்களை, ஆசிரியர் தொழில் தொடர்பாக வழங்கும்.

            இதுதொடர்பான முழு விபரங்களுக்கு www.usief.org.in/Fellowships/Distinguished-Fulbright-Awards-Teaching-Program.aspx என்ற இணையதளம் செல்லவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive