ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழக
மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தாங்களே அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்;
அதற்காக கெசட்டட் அதிகாரிகளை அணுகத் தேவையில்லை என, மத்திய மனித வளத் துறை
அறிவித்துள்ளது.
உண்மையான சான்றிதழ்களை அனைத்து
விண்ணப்பங்களுக்கும் அனுப்பி வைக்க முடியாது என்பதால் அவற்றின் நகல்கள்
பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், போட்டோ காப்பிகள் உண்மையானவை
தான் என்பதை உறுதிபடுத்த கெசட்டட் அதிகாரிகளின் கையெழுத்து அந்தச்
சான்றிதழ்கள் மீது இடப்படுகின்றன.
பல அதிகாரிகள் அதற்கு பணம் கேட்கும் நிலை
உருவாகி உள்ளது. மேலும், அத்தகைய அதிகாரிகளைத் தேடி அலைவதால் மாணவர்களுக்கு
சிரமமும் ஏற்படுகிறது என்பதை அறிந்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை,
மாணவர்கள் தாங்களாகவே சான்றிதழ்களை அட்டெஸ்ட் செய்து கொள்ளலாம்; இறுதியில்,
உண்மைச் சான்றிதழ்களை காட்டி அதை உறுதிபடுத்திக் கொள்ளலாம் என,
அறிவித்துள்ளது.
இது, கிராமப்புற மாணவர்கள் மற்றும் பலதரப்பினருக்கும் பலனளிக்கும் அறிவிப்பாக அமைந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...