சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பாடத்திட்டத்திலிருந்து ஆங்கில மொழியை நீக்க
வேண்டும் என்ற கோரிக்கையோடு, மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்த 300 பேர்
அடங்கிய குழுவினர், டெல்லி UPSC அலுவலகம் முன்பாக போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
மேலும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
யூனியன் உறுப்பினர்கள், அலிகார் முஸ்லீம் பல்கலை ஆசிரியர்கள் ஆகியோர்
அடங்கிய பிரதிநிதிகள் குழு, இதுதொடர்பாக UPSC தலைவர் டி.பி.அகர்வாலை
சந்திக்கவுள்ளது.
"அரசாங்கமும், அதிகாரிகளும் உலகமயமாக்கலைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால்
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் வெளிநாட்டு மொழிகளை
சேர்ப்பதில்லை. இதனால், வெளிநாட்டு மொழிகளைப் படித்து சிவில் சர்வீஸ்
தேர்வெழுத வரும் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்" என்று அந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...