Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் பணி நேரத்தில் பள்ளியில் இல்லாவிடில் இனி, ஊதியத்தில் “வெட்டு


           பணி நேரத்தில் பள்ளியில் இருக்காத ஆசிரியர்களின் ஊதியத்தில் “வெட்டு’ விழும் வகையில், துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை துவக்கியிருக்கிறது, கோவை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம்; இதற்கு, ஆசிரியர் சங்கம் ஆதரவு அளித்திருக்கிறது.


          “அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், பள்ளிக்கு உரிய நேரத்தில் வரவேண்டும். வகுப்பு நேரத்தில் சொந்த வேலைகளை கவனிக்கக் கூடாது’ என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. எனினும், கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர் குறித்த பணி நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை என்றும், ஆசிரியர்களை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர்களில் சிலரும் குறித்த நேரத்தில் பணிக்கு ஆஜராவதில்லை என்றும் புகார்கள் எழுந் துள்ளன. இதை சரிப்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் அடிக்கடி பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வின்போது பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

          எனினும், சில ஆசிரியர்கள் தங்களது வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு சொந்த வேலைகளை கவனிக்க வெளியே கிளம்பி விடுவதாக கூறப்படுகிறது. இதை தலைமை ஆசிரியர்களும் கண்டுகொள்வதில்லை. சில தலைமை ஆசிரியர்களோ, தங்களது விடுமுறை விண்ணப்பத்தை தங்களது மேஜையின் மீது வைத்து விட்டு சொந்த வேலையை கவனிக்கச் சென்று விடுகின்றனர். அன்றைய தினம் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கு வருகை புரிந்தால் விடுப்பில் இருப்பதாகவும், விடுப்பு விண்ணப்பத்தை மேஜையின் மீது வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். கல்வி அலுவலர் ஆய்வுக்கு வருகை தராவிடில், மாலையோ அல்லது மறுநாளோ பள்ளிக்கு வந்தவுடன், முந்தைய நாள் எழுதி மேஜை மீது வைத்திருந்த விடுப்பு விண்ணப்பத்தை கிழித்து போட்டு விடுகின்றனர்; அன்றைய தினம் பணியாற்றியதாக வருகை பதிவேட்டில் கையெழுத்திடுகின்றனர்.

            இதுபோன்ற முறைகேடுகள், பெரும்பாலும் கிராமப்புறங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் நடக்கின்றன. தலைமை ஆசிரியர்களுக்கு உதவி தலைமை ஆசிரியர்களும், சக ஆசிரியர்களும் உடந்தையாக இருப்பதால் கல்வி அலுவலரின் திடீர் ஆய்வின்போது இவற்றை கண்டுபிடிக்க முடிவதில்லை. இப்பிரச்னைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க, கோவை மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் அய்யண்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக இவர் நடத்திய திடீர் ஆய்வுகள், துவக்கப் பள்ளிகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஆய்வின்போது பணியில் இல்லாத ஆசிரியர்களின் சம்பளத்தில் “வெட்டு’ விழும் வகையில் இவர் நடவடிக்கை மேற்கொண்டதே இதற்கு காரணம்.கடந்த இரண்டு மாதங்களில் இவர் மேற்கொண்ட ஆய்வின் போது பணியில் இல்லாத இரண்டு தலைமை ஆசிரியர்களின் “இன்கிரிமென்டை’ ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார். பணி நேரத்தில் பள்ளியில் இல்லாத துவக்கக் கல்வி ஆசிரியர்கள் 10 பேரின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

           இதுகுறித்து அய்யண்ணன் கூறியதாவது:அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் ஏழை மாணவர்கள். ஆசிரியர்களை நம்பிதான் அவர்களின் பெற்றோர் பள்ளியில் சேர்க்கின்றனர். பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்தாலும், சிலர் பணி நேரத்தில் பள்ளியில் இருப்பதில்லை; சொந்த வேலைக்கு அதிக முக்கியத்துவம் தருவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு வகுப்புக்கான ஆசிரியர் வராவிட்டால், மாணவர்கள் எழுப்பும் கூச்சல் பக்கத்து வகுப்பு மாணவர்களின் படிப்பையும் பாதிக்கிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர முடிவு காண, வேறு வழியில்லாமல் ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை “கட்’ போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அனைத்து துவக்கப் பள்ளி ஆசிரியர்களும் காலை 9.10 மணிக்கு பள்ளியில் ஆஜராகியிருக்க வேண்டும்; வகுப்பு முடிந்தபின் மாலை 4.10 மணி வரை இருக்க வேண்டும். குறித்த நேரத்தில் பள்ளிக்கு வராத, வகுப்பு நேரத்தில் பள்ளியில் இல்லாத ஆசிரியர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடரும். இந்த நடவடிக்கைகளுக்கு ஆசிரியர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.இவ்வாறு, அய்யண்ணன் தெரிவித்தார்.




1 Comments:

  1. OUR FUTURE IN PRIMARY EDUCATION. SO LIKE THAT ACTION INDIA - TAMILNADU BECOME A GOOD EDUCATION STATE. I REALLY APPRICIATE THAT

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive