Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் திட்டத்தை மறுபரிசீலிக்க கோரிக்கை

          கட்டாய கல்வி சட்டத்தின்கீழ், 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி "அனைவரும் பாஸ்" என்ற திடத்திற்கு, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

         ஹரியானா மாநில கல்வி அமைச்சர் கீதா புக்கலின் தலைமையிலான கல்விக்கான தேசிய ஆலோசனை வாரியத்தின் துணை கமிட்டி, இதுதொடர்பான சிக்கலை ஆராய்ந்து வருகிறது மற்றும் இந்த கமிட்டி, அக்டோபர் 23ம் தேதி தனது அறிக்கையை மனிதவள அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது. மேலும், இந்தக் கமிட்டியானது, அனைவரும் பாஸ் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நாடாளுமன்ற பேனலையும் சந்திக்கவுள்ளது.

              பல மாநிலங்கள் இந்த "அனைவரும் பாஸ்" திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில், 9ம் வகுப்புவரை எந்த சிக்கலுமின்றியும், கடின உழைப்பின்றியும் கடந்துவரும் மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை முதன்முதலாக எதிர்கொள்ளும்போது கடும் நெருக்கடியை சந்திக்கின்றனர். இதனால், அவர்களின் நிலை மட்டுமின்றி, ஆசிரியர்களின் நிலைமையும் சிக்கலுக்கு உள்ளாகிறது என்று இந்த அம்சத்தை எதிர்ப்பவர்கள் வாதிடுகிறார்கள்.

              மத்திய மனிதவள இணையமைச்சர், இந்த கமிட்டியின் அறிக்கையை, அடுத்த கூட்டத்திற்கு முன்னதாகவே சமர்ப்பித்து விடுமாறு, ஹரியானா அமைச்சர் புக்கலிடம் கூறியுள்ளார். ஏனெனில், இதன்மூலம் அடுத்து நடைபெறும் கூட்டத்தில் இதைப்பற்றி தெளிவாக விவாதிக்க முடியும் என்பதால் இவ்வாறு அறிவுறுத்தப்படுவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

            தேர்வே இல்லாத இந்த "அனைவரும் பாஸ்" திட்டம், மாணவர்களின் சுய திருப்தியை பாதிப்பதோடல்லாமல், ஆசிரியர்களின் திறனையும் பாதிக்கிறது என்பதால், இத்திட்டத்தை மறுஆய்வு செய்யுமாறு, மத்திய மனிதவள அமைச்சகத்தை இந்தக் கமிட்டி கேட்டுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




4 Comments:

  1. i whole heartedly welcome re considering the all pass system which is cheating the pupil by govt. give importence to teachers, help the teachers, get advice from teacher, the country will develop. otherwise the country will go down.if you give importance to teacher education develops. think deeeeeep

    ReplyDelete
  2. i whole heartedly welcome re considering the all pass system which is cheating the pupil by govt. give importence to teachers, help the teachers, get advice from teacher, the country will develop. otherwise the country will go down.if you give importance to teacher education develops. think deeeeeep

    ReplyDelete
  3. vettriarasan10/16/2013 8:06 pm

    8 வகுப்பு வரை பாஸ் நல்லதிட்டம் தான். ஆனால் அதுரை கற்பிக்கும் ஆசிரியர்கள் சத்துணவு அமைப்பாளராக இருந்து பள்ளியையும் சத்துணவையும் கவனித்துக்கொண்டால் இடைநிலை ஆசிரியருக்கு கொடுக்கும் தண்ட சம்பளம் வேறு ஏதாவது நல்ல ”அம்மா பால்புரட்சி திட்டம் ” பள்ளிவேலை நாட்களில் காலை 11 மணிக்கும், மாலை 3.30 மணிக்கும் மாணவர்களுக்கு கொடுத்து ஊட்டமுடன் நோய்நொடியின்றி நல்ல அறிவுள்ள சமுதாய்த்தை உருவாக்க முடியும். யோசித்து பாரும்

    ReplyDelete
  4. THIS WILL IMPROVE OUR STUDENTS ABILITY .

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive