அரசு பள்ளிகளில், "ரெகுலர்' அடிப்படையில்,
ஆசிரியரை பணி நியமனம் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால்,
மாணவர் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக, 6,545 ஆசிரியர்களை, தொகுப்பூதிய
அடிப்படையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, நியமனம் செய்து கொள்ள,
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை
ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
தமிழ்ப் பாடத் தேர்வு பிரச்னையால், பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகளையும்
வெளியிட முடியாமல், டி.ஆர்.பி., திணறி வருகிறது. மேலும், இனிமேல், தேர்வு
முடிவை வெளியிட்டாலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, தகுதி வாய்ந்தவர்
பட்டியலை, கல்வித் துறையிடம் அளித்து, அதன் பின், கல்வித்துறை, பணி நியமனம்
செய்வதற்குள், பல மாதங்கள் கரைந்துவிடும்.
6,500 பேர்... : இதேபோல், 3,000த்திற்கும்
மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியும் கால தாமதம்
ஏற்பட்டு வருகிறது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக,
2,645 முதுகலை ஆசிரியர் பணியிடங்களையும், 3,900 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்களையும், தொகுப்பூதிய அடிப்படையில், உடனடியாக நிரப்புவதற்கு,
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சம்பளம் எவ்வளவு? : முதுகலை ஆசிரியர்களுக்கு,
மாதம், 5,000 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாதம், 4,000 ரூபாயும்,
சம்பளமாக வழங்கப்படும். இதற்காக, 20.18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும்,
முதல்வர் உத்தரவிட்டுள்ளார். "ரெகுலர்' ஆசிரியர் தேர்வு செய்யும் வரை, இந்த
தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்ற, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வேலை
வேண்டுவோர், அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு விண்ணப்பித்து, பணியில் சேரலாம்.
இது குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர்,
ராமேஸ்வர முருகன் கூறியதாவது: தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய, முதல்வர்
எடுத்த நடவடிக்கை, பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கு, மிகவும்
பயனளிக்கும். பணியை எதிர்பார்ப்பவர்கள், தங்கள், சொந்த ஊரில் உள்ள
பள்ளிகளுக்கு மட்டுமே, விண்ணப்பிக்க வேண்டும். நீண்ட தொலைவில் உள்ள,
வெளியூரில் உள்ள பள்ளிகளுக்கு, விண்ணப்பிக்கக் கூடாது. பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு விண்ணப்பித்து, பணியில் சேரலாம். முதுகலை ஆசிரியர்
பிரிவில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வணிகவியல், உயிரியல்,
விலங்கியல், தாவரவியல் ஆகிய பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்
பிரிவில், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கும்,
தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவர். இவ்வாறு, ராமேஸ்வர முருகன்
தெரிவித்தார்.
தற்காலிக ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்களே
தேர்வு செய்யலாம் என, தெரிவித்திருப்பதால், ஆசிரியர் தேர்வில், கடும்
போட்டி உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Timely decision by AMMA for the betterment of the school going children.
ReplyDeleteதகுதியான ஆசிரியர்களை நியமிக்க தகுதிதேர்வை நடத்திவிட்டு,தகுதியற்றவர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதால்?உங்கள் கல்வி கொள்கை பாதிக்காதா?சில மாதங்கள் பாதித்தால் பரவாயில்லையா?
ReplyDeleteதகுதியான ஆசிரியர்களை நியமிக்க தகுதிதேர்வை நடத்திவிட்டு,தகுதியற்றவர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதால்?உங்கள் கல்வி கொள்கை பாதிக்காதா?சில மாதங்கள் பாதித்தால் பரவாயில்லையா?
ReplyDeleteசாதி,மத,இனம் கடந்து தலைமையாசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகங்களும் செயல்படுமா?திறமையானவர்களை மட்டும் நியமிக்குமா?
ReplyDeleteதகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படுவதில்லை ஆசிரியர் தகுதி தேர்வு. ஆசிரியர்களை தகுதி இல்லாதவர்கள் என தவறாக கூறவே நடத்தப்படுவதே தகுதி தேர்வு.
ReplyDeleteஆசிரியர் நியமனத்தில் அரசு எந்த வித சலுகையும் காட்டாது என கூறிய தமிழக அரசு தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கும் போது அரசியல் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டு திறமையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றால் நடந்து முடிந்த இரண்டு தகுதி தேர்வுகளிலும் மதிப்பெண் 85-89 வரை எடுத்து இருப்பவர்களை நியமனம் செய்வதால் சிபாரிசு இல்லாமல்
ReplyDeleteஓரளவு தகுதியான ஆசிரியர்கள் நியமிக்க முடியும்.ஊழல் நடை பெறாமல் .தகுதியானவர்களை நியமிக்க முடியும். இதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
த.ஆ நியமிப்பதை விட் SSA,RMSA Supervisor மூலம் அரசு பணம் வழங்குவதால் SSA,RMSA SUPERVISORS இவர்களே உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். இதற்கு முன்னர் EVS மூலம் இவர்கள் தான் நியமனம் செய்தனர். அதிகாரிகள் சற்று யேர்சியுங்கள்
ReplyDeleteeni teachers life ambothan
ReplyDeleteஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்க பட்டவர்களையும் ,ஆசிரியர் தகுதி தேர்வில் 88/89 மதிப்பெண் பெற்றவைகளையோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையிலோ உள்ளவர்களை நியமனம் செய்யலாம்.
ReplyDelete