தமிழகத்தில் மூன்றாண்டுகளாக சிறப்பாசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால், அவர்கள் குடும்பத்தினர் தத்தளிக்கின்றனர்.
தொண்டு நிறுவனங்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்ட இப்பள்ளிகள், 2012ம்
ஆண்டு முதல் தடை செய்யப்பட்டன. இதில் பணியாற்றிய 202 ஆசிரியர்களை,
சிறப்பாசிரியர்களாக அறிவித்த அரசு, அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு
இணையாக சம்பளம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்தது. இவர்களுக்கு 2010 முதல்
சம்பளம் வழங்கப்படவில்லை. மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவித் தொகையும்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பணி என்பதால் ஆர்வத்துடன் சேர்ந்தோம்.
சம்பளப் பிரச்னை ஏற்பட்டவுடன், உயர் அதிகாரிகளிடம் முறையிட்டோம். மார்ச்
மாதத்தில், ஆறு மாதங்களுக்கான சம்பளம் மட்டும் வழங்கப்பட்டது. ஆனால், 3
ஆண்டுகளுக்கும் மேலான சம்பளம் கிடைத்தபாடில்லை. வட்டிக்கு பணம் வாங்கியும்,
நகைகளை அடகு வைத்தும் குடும்பம் நடத்துகிறோம், என்றனர்.
இதுதொடர்பாக மதுரை மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட 50 ஆசிரியர்கள்,
கலெக்டர் சுப்பிரமணியனிடம் மனு அளித்தனர். ஆசிரியர்கள் கூறுகையில்,
"கோரிக்கை குறித்து ஒரு சில நாட்களில் எந்த முடிவும் தெரியவில்லை என்றால்,
அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து அறிவிப்போம்" என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...