தமிழகத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்1
தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என அரசு பணியாளர்
தேர்வாணையத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
நெல்லையில் மூத்த வக்கீல்கள் திருவுருவ
படத்திறப்பு விழாவில் பங்கேற்ற டி.என்.பி.எஸ்.சி., சேர்மன் நவநீதகிருஷ்ணன்
நிருபர்களிடம் கூறியதாவது,
"டி.என்.பி.எஸ்.சி., நடத்திய டி.எஸ்.பி., துணை
கலெக்டர், மாவட்ட பதிவாளர் போன்ற 25 பணியிடங்களுக்கான குரூப்1 தேர்விற்கு
ஆயிரத்து 372 பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் 84 சதவீதம் தேர்வு எழுதினர்.
குரூப்1 தேர்வு சிறந்த முறையில் நடந்தது.
விடைத்தாள்கள் நேர்மையான முறையில் மதிப்பீடு
செய்யப்பட்டு 3 மாத காலத்திற்குள் முடிவு வெளியிடப்படும். இதில் தேர்ச்சி
பெறுபவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படவுள்ளனர்.
கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால்
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டி தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற
முடியும்" இவ்வாறு என்.பி.எஸ்.சி., சேர்மன் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...