Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TRB expected that possibilities of per | ஆசிரியர் தகுதித்தேர்வில் அதிக ஆசிரியர்கள் தேர்வு பெற வாய்ப்பு:ஆசிரியர் தேர்வு வாரியம்! centage of TNTET passing may Hike


           ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


                   மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த சட்டம் கடந்த 2010 முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
                தமிழ்நாட்டில், மாநில அளவிலான முதல் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. அந்த தேர்வில் லட்சக்கணக்கான ஆசிரியர் தேர்வு எழுதினாலும், வெறும் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

               அப்போது, தேர்வுக்கு 1 மணி நேரம் போதாது என்ற குற்றச்சாட்டை பெரும்பாலான ஆசிரியர்கள் முன்வைத்ததால், தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு துணை ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. அந்த தேர்வில், தேர்ச்சி விகிதம் சுமார் 3 சதவீதமாக உயர்ந்தது.

                    இந்நிலையில், ஆசிரியர்களுக்கான 3-வது தகுதித்தேர்வு கடந்த மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நடந்தது. இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் 2 லட்சத்து 62 ஆயிரம் பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் 4 லட்சம் பேரும் என மொத்தம் 6 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

                    அவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இடைநிலை ஆசிரியர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி முடிவடைந்துவிட்டது. தற்போது பட்டதாரி ஆசிரியர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது.

                    தகுதித்தேர்வுக்கான கீ ஆன்சர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டடுள்ளது. இதில், ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதுதொடர்பான ஆவணங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு தேர்வு வாரியம் கூறியிருந்தது. இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, சுமார் 3 ஆயிரம் பேர் ஆவணங்களை அனுப்பி உள்ளனர்.

                     இதுகுறித்து ஒவ்வொரு பாடத்திற்கும் 3 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் வினாக்களையும், விடைகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். நிபுணர் குழு அளிக்கும் முடிவின்படி விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். இந்த தகுதித்தேர்வில் 8 சதவீதம் பேர் அதாவது ஏறத்தாழ 53 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இதற்கிடையே, மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் அகில இந்திய அளவில் 77,634 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 10 சதவீத தேர்ச்சி ஆகும்.

                           ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்து இருப்பதால், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், இந்த முறை அதிகமான ஆசிரியர்கள், தேர்ச்சி பெறக்கூடும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

       இது ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 நன்றி : விகடன்




6 Comments:

  1. ivalo easya question ketta pass pannama enna panuvangalam?

    ReplyDelete
  2. What will be the minimum cut off to get a job for major english candidates?can someone guess.....

    ReplyDelete
  3. In my opinion 40000 people will get qualifying mark....

    ReplyDelete
  4. Kastapatu pass mark vankiten
    eppa Job kitaikumanu? enna life pavam sir nanga

    ReplyDelete
  5. Kastapatu pass mark vankiten
    eppa Job kitaikumanu? enna life pavam sir nanga

    ReplyDelete
  6. Kastapatu pass mark vankiten
    eppa Job kitaikumanu? enna life pavam sir nanga

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive