ஆசிரியர் தகுதி தேர்வு 2013-ம் ஆண்டு தாள் - 2 எழுதிய (4௦௦௦௦௦) பேரில் 7 சதவிகிதம் பேர் அதாவது மொத்தம் 28000 பேர் வெற்றியடைய வாய்ப்புள்ளது. அவர்களில்
தமிழ்,ஆங்கிலம் மற்றும் சமூகஅறிவியல் பாடத்தில் 18000 பேறும் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் 10000 பேறும் வெற்றிபெற
வாய்புள்ளது.இதில் தனித்தனியாக பார்த்தால் தமிழ் - 4000,ஆங்கிலம் -8000,கணிதம் - 6000, அறிவியல் - 4000, சமூகஅறிவியல் - 6000. இவ்வாறு எதிர்பார்க்கலாம்.
இவர்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றும் போது st , sc பிரிவினர் அனைவரும் 90 மதிப்பெண் எடுத்து தகுதி பெற்றாலே போதுமானதாக இருக்கும் ஆனால் மற்ற பிரிவினர்களில் 105 மற்றும் 120 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தெரிவு பெற்று விட அதிக வாய்ப்புள்ளது .மீதமுள்ள பணி இடங்களுக்கு வெய்ட்டேஜ் மிகவும் முக்கியமானதாக அமையும் என்பதில் தேர்வு எழுதியவர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
7 சதவிகிதம் பேர்
வெற்றிபெற்றால் எந்தெந்த பிரிவினர் எவ்வளவு மதிப்பெண்
பெற்றிருந்தால் ஆசிரியர் பணிக்கு தெரிவு செய்யப்பட வாய்ப்பு இருக்கலாம் என்ற
கணக்கீடும், வெய்ட்டேஜ் அடிப்படையில் எவ்வளவு பேர் தெரிவு செய்ய வாய்ப்புள்ளது என்பதையும் உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு படி மட்டுமே கணக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது இதில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை,
முக்கியமாக பணி இடங்களின் எண்ணிக்கையை பொருத்து இது மாறுபடும்.
டெட் மதிப்பெண் அடிப்படையில் அட்டவணை
கீழுள்ளவாறு ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் பெறுபவர்களுக்கு பணி நியமனம்
கிடைக்க அதிகபடியாக வாய்ப்புள்ளது.
Tamil
|
English
|
Maths
|
Science
|
Social Science
|
|
OC
|
105
|
105
|
105
|
105
|
120
|
BC
|
105
|
105
|
105
|
105
|
105
|
MBC
|
105
|
105
|
105
|
90
|
105
|
SC
|
105
|
90
|
90
|
90
|
105
|
ST
|
90
|
90
|
90
|
90
|
105
|
இங்கு நாம் குறிப்பிட்டுள்ளவாறு குறைந்தபட்ச டெட் மதிப்பெண் பெற்றுள்ள பெரும்பாலோர் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி கல்வியிலும் ஓரளவிற்கு நல்ல மதிப்பெண் பெற்று அதிக வெயிட்டேஜ் பெறுகின்றனர் என்பதே நிதர்சனம். ஆதலால் தனியாக வெயிட்டேஜ் அட்டவணையை நாம் வழங்கவில்லை.
பணி நியமன அடிப்படையில் அட்டவணை
ஒவ்வொரு பாடபிரிவிலும் 105 - 120 க்கு மேல் மதிப்பெண் பெறுபவர்கள் மற்றும் இட ஒதுக்கீடு
முறையில் தெரிவு செய்யப்படுபவர்களின் உத்தேச கணக்கீடு
Subject
|
(OC+BC+MBC)
(120
க்கு மேல் பெறுபவர்கள்
+
105 க்கு மேல் பெற்று 12ஆம் வகுப்பு, கல்லூரி
கல்வியில் அதிக வெய்ட்டேஜ் பெறுபவர்கள் மட்டும்)
|
(SC+ST)
(105
க்கு மேல் பெறுபவர்கள்
+
90 க்கு மேல் பெற்று 12ஆம் வகுப்பு, கல்லூரி
கல்வியில் அதிக வெய்ட்டேஜ் பெறுபவர்கள் மட்டும்)
|
TOTAL
|
Tamil
|
400
|
400
|
800
|
English
|
600
|
800
|
1400
|
Maths
|
400
|
600
|
1000
|
Science
|
400
|
400
|
800
|
Social Science
|
600
|
600
|
1200
|
Total
|
2400
|
2800
|
5200
|
இந்த (5100) பணி இடங்கள் தவிர மற்ற மீதமுள்ள பணி இடங்களுக்கு (ஏறத்தாழ 7900) வெய்ட்டேஜ் மிகவும் முக்கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். பணிநியமனம் பெறுபவர்களில் ஏறத்தாழ 65 சதவீதம்
பெண்களாக இருக்க வாய்ப்புண்டு.
குறிப்பு – ஒரு கருத்தை தேர்வர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் என்பதை சாதிவாரியாக குறைக்க
இயலாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதே சமயம் தேவைக்கும் அதிகபடியாக
தேர்வர்கள் தேர்ச்சி பெற்றால் நிச்சயம் சாதி வாரியாக பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு
அவற்றில் தேர்வர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் முன்னுரிமை ( Priority Like – Widow &
Ex-serviceman) அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இல்லையேல் பணி இடங்களில் இடஒதுக்கீடு பின்பற்றாமல் கடந்த தேர்வில் வெற்றி பெற்ற
அனைவருக்கும் பணி ஒதுக்கீடு செய்ததை போல் இம்முறையும் அனைவருக்கும் பணி வழங்கலாம்.
ஆனால் கடந்த தேர்வினை போல் அல்லாமல் இம்முறை அதிகபடியானோர் தேர்ச்சி பெறுவதால்
தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி ஒதுக்கும் அளவிற்கு காலி பணியிடங்கள் இருக்குமா
என்பது கேள்விக்குறி?
-----
இங்கு நாம் வழங்கியுள்ள
விவரங்கள் அனைத்துமே டி.ஆர்.பியின் தற்காலிக விடைகளின் அடிப்படையில்
தேர்ச்சிபெற்றுள்ளதாக நம்முடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட பல்வேறு
தேர்வர்களினுடைய கருத்துகளின் தொகுப்பே ஆகும். பல்வேறு காரணிகளின் அடிப்படையில்
அமைந்துள்ள இக்கட்டுரை ஒரு எதிர்பார்க்கப்படும் கருத்துகணிப்பு மட்டுமே தவிர
இறுதியானது அல்ல என தங்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்.
நன்றி!
இக்கட்டுரை அமைக்க நமக்கு
உதவிய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்கள், தேர்வர்கள் அனைவருக்கும் நன்றிகள்
தெரிவித்துக்கொள்கிறோம்.
எண்ணம் போல் வாழ்வு.
நல்லதே நினையுங்கள்!
நல்லதே நடக்கும்.
Thiruthum pani mudinththa, innum 2nalil result publish akuma
ReplyDeleteHow many members will be get more than 100 marks in paper two
ReplyDeleteB. C LA 90 MARKS VANIGINAVAGA KADHI ADO KADHI THANA?
ReplyDeleteபெண்களுக்கான இடஒதுக்கீடு பின்பற்றபடுமா?
ReplyDeleteINTHA ARTICLEA PADICHATHULA NIRAYA DOUBT CLEAR AKIRKU.GVT TR JOB KIDAIKIRATHE KASTAM THA.INTHA TETLA JOB KIDAIKALANA NEXT LAM R.R.R.R.R.R.R.KASTAM.HALF AN HOUR LA CORRECTION MUDIJIRUMAM KONJAM SEKIRAM RESULT SEKIRAM PUBLISH PANUNGA TRB PLZZZZZZZZZZZZZZZZZZZZ
ReplyDeletepengalukkana ida odhukeedu nichayam undu thozhi.
ReplyDeleteudharanamaaga BCG enbathil BC ai serntha aan matrum pen iruvarumae madhipen adipadaiyil pani vaippu peralam.
adhae samayam BCW enbathil BC Pen mattumae velai vaiippu pera iyalum.
enavae irandu vagaiyilum pengal panivaippu peralam. erathala 70 % pen aasiriyargalukkae pani niyamanam kidaikkum ena edhirparkkirom.
bed la re apear ana vangaluku waiting la posting kidaikama? ??
ReplyDeletebed la re apear ana vangaluku waiting la posting kidaikama? ??
ReplyDeleteWhy TRB struggles this much to confuse the candidates..50-50 can be done..means 50 percent seniority 50 percent by TRB exam...both will be satisfied.
ReplyDelete