Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது

            2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு

             2010–ம் ஆண்டு மே மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முடித்தவர்களை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும்எதிர்காலத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் அவர்களை நியமிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


                பட்டதாரி ஆசிரியர்தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் செய்யது இப்ராகிம். இவர்,மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:
 
                   நான் பி.எஸ்சிபி.எட் முடித்துள்ளேன். கடந்த 2010–ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டது. அதன்படி எனது பெயரும் ஆசிரியர் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டது. 13.5.2010 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது.
அதன்பின்புஎனக்கு நியமன ஆணை எதுவும் வரவில்லை. காரணம் கேட்ட போது, 23.8.2010–க்கு பின்னர் பணியில் சேரும் ஆசிரியர்கள் கண்டிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும்அதன்படி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் எனக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பு
 
                   இந்த விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பேஎனக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது. எனவே,என்னை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். எனக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
 
                   இதே போன்று உத்தமபாளையத்தை சேர்ந்த செய்யது இப்ராகிம்,மதுரையை சேர்ந்த நிர்மலா ஆகியோரும் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி எஸ்.மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் செய்யது இப்ராகிம் சார்பில் வக்கீல் சண்முகராஜாசேதுபதிநிர்மலா சார்பில் வக்கீல் முத்தால்ராஜ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
நிர்ப்பந்திக்கக்கூடாது
 
மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:
 
                   ‘‘ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற விதி கொண்டு வரப்படுவதற்கு முன்பே மனுதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து விட்டது. எனவேமனுதாரர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது. எதிர்காலத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் மனுதாரர்களை நியமிக்க வேண்டும்.’’

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.




11 Comments:

  1. 2ø10 may la c.v pona elarukkum tet kidaytha.illa konja perukku mattum thana

    ReplyDelete
  2. Appo 1992 la Bathikkapattorukku D.Ted 2006 la mudichu 2008-2009 la certificate verification mudija ellorukkum ena pathil. Athuvum court case than podanuma

    ReplyDelete
  3. Appo 1992 la D.ted padichi Bathikkappattorkku 2006 la padipa mudichi 2008-2009 la certificate verification muducha ellorum case podanuma......

    ReplyDelete
  4. Case podravangulukku mattum tha

    ReplyDelete
  5. 1743 பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது,
    அவர்கள் உயர்நீதிமன்றத்தில் சென்று,தீர்ப்பினை பெற்றுக்கொள்கிறோம் என மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொண்டதால் நீதி அரசரும் அவ்வாறே
    ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
    சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கினை நடத்திவருகிறார்கள்.அவர்களை தொடர்புகொள்ள 9843156296

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. case pottavkalukku mattu ma plz appadina engalaum sethukonga

    ReplyDelete
  8. Prabu sir enga kooda Cv attend pannavanga 32000 candidates 8000 absent above 13000 candidates appointment order kuduthutanga remaining above 10000 candidates exam na eppadi sir NCTE rules 23.8.2010 before g.o , pending post tet exam elutha vendamnu solli irukanga enga kooda vanthavanga appointment vangitanga nanga court la case pottu win pannittom god niyamam yar pakkam irukoo avar pakkam tha iruparu na 2006 l B.Ed mudicha appave exam vaccha naangalum pass panni appointment order vangi irupom 2006-2011 varaikum seniority follow pannanga neenga B.Ed mudichu marriage panni children irunthu 10 year apparam exam vachha neenga write pannuveengala

    ReplyDelete
  9. 1743 D.Ted candidates high court la argument mudinthu vittathu judgement kudukama stop panni vachu irukanga supreme court la case irukarthu naala so supreme court la permission vangi high court la judgement vanga ready ah irukanga ithu samanthamana news mela iruku

    ReplyDelete
  10. Please clarify , Madurai Highcourt judgement applicable for everyone who went for certificate verification in 2010 or who filed the the case only. I too participated in the cv . Should i file a case or can i join with others who won the case.
    Can anyone help me to know what exactly going on. TET exemption for everyone who went for cv or who filed the case .

    ReplyDelete
  11. Mr.Prabhu we are not afraiding of the Exams. 1992 la nanka padichi mudichi exam ezuthanu sonnalum ezuthi iruppom. because of the lazyness of the tamilnadu government we complete our studies in 2006. After that also our certificate verified in 2008-2009. but again the govt. changed into overall seniority for the benefit of some area peoples. So now we are asking the same we are also having the seniority and we are completed the certificate verification (and also Padhikkappattor)Why we put case against the exam. Govt. Will take necessary action for the Teachers Who are all Affected By the Government. NOTE: ALREADY THE CASE RESULT IS KEPT IN PENDING...........

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive