Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET ஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வி பதில்கள் முரன்பாடு உள்ளது: தேர்வு வாரியத்தில் முறையீடு



              17 ந் தேதி தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு கேள்விகளுக்கு வாரியம் வெளியிட்டுள்ள பதில்களில் 4 கேள்விகளுக்கு முரன்பாடு உள்ளதாக கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஆசிரியை தேர்வு வாரியத்திற்கு முறையீடு செய்துள்ளார்.



                புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் ஜெமின் பன்னீர்செல்வம் மகள் விமலாதேவி. இவர் ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு முடித்துவிட்டு கடந்த ஆகஸ்ட் 17 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதியுள்ளார்.


              தேர்வு முடிந்த சில நாட்களுக்கு பிறகு தேர்வு வாரியம் கேள்விகளுக்கான பதில்களை இணைய தளத்தில் வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 4 கேள்விகளுக்கு  பதில்கள் முரண்பாடாக உள்ளது. இவற்றை தேர்வு வாரியம் கவணத்தில் கொண்டு பதில் தாள்களை திருத்த வேண்டும் என்று தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது..


              டி.இ.டி 2013, தாள் - 1. சீரியல் பி. கேள்வித் தாள் எனக்கு தரப்பட்டது. அந்த கேள்வித் தாளில் கேள்வி எண் 1. க்கு சரியான பதிலாக டி. மன வரைபடம் என்று பதில் வெளியாகி உள்ளது. ஆனால் இதே கேள்விக்கு பி.எட் (பக்கம் எண் 117), எம்.எட். ( ப.எண் 302) உளவியல் பாடப் புத்தகத்தில் பொதுமை கருத்துப்படம் என்று பதில் தரப்பட்டுள்ளது.
 
              அதே போல கேள்வி எண் : 7 . குழந்தைகளின் உடல் வளர்ச்சி எந்த வயதில் மிக உச்சகட்டத்தில் காணப்படுகிறது என்ற கேள்விக்கு ஏ. 0 – 2 வயதில் என்பது சரியான பதிலாக வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பி.எட். (ப.எண் 80), எம்.எட் (ப.எண் 326) உளவியல் புத்தகத்தில் டி. 12 – 19 வயதில். ஊடலில் உள்ள வளர்ச்சியில் உச்சநிலை அமையும் என்று உள்ளது.
 
                கேள்வி எண் : 55. “தனித் திரட்டு பாடல்” என்னும் நூலை தொகுப்பித்தவர் ஏ. பொன்னுச்சாமி என்று பதில் வெளியாகி உள்ளது. ஆனால் 7 ம் வகுப்பு தமிழ் புத்தகம் (ப.எண் 53) பொன்னுச்சாமி தேவர் வேண்டுகோளுக்கிணங்க சந்திரசேகர கவிராசப் பண்டிதர் தமிழகம் முழுவதும் சென்று தேடி தொகுத்தார் என்று உள்ளது.
 
               அதே போல கேள்வி எண் : 104. தவறான கூற்று எது என்ற கேள்விக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 4 பதில்களுமே சரியான கூற்றுகளாக உள்ளது. ஆதில் தவறான கூற்று இல்லை. ஆனால் சி. சரியான பதிலாக வெளியாகி உள்ளது. இதற்கு 9 வகுப்பு கணித புத்தகம் 53 – 55 பக்கங்களில் சரியான பதில் உள்ளது.
 
                இப்படியான முரண்பாடான பதில்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை சரிசெய்து மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
 
                   குழப்பங்களை தீர்த்து தேர்வு முடிவுகள் வெளியானால் வேலைக்காக தேர்வு எழுதியுள்ள ஆசிரியர்களுக்கு பயனுள்ளதா இருக்கும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

       - இரா.பகத்சிங்

நன்றி : நக்கீரன்




4 Comments:

  1. தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர். பணியை செய்தவர் தொகுத்தவர். பணியை செய்ய வைத்தவர் தொகுப்பித்தவர். எப்படி நோக்கினும் ஏ. பொன்னுசாமி என்பதே பதில்.

    ReplyDelete
  2. Qns No 7. They asking maximum rate of growth (i.e Speed of growth) but not maximum of growth(fully growth). So 0-2 is correct answer..

    ReplyDelete
  3. When will pg trb result kindly tell cut of bcm

    ReplyDelete
  4. Friends pls update ur tet mark

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive