Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை


          "நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை" என, சமீபத்தில், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்
    
         வேலை கிடைப்பதற்கு உள்ள தகுதிகள் குறித்த ஆய்வு ஒன்றை, அமெரிக்காவின் மனித வள மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது. இதற்காக 2,000த்துக்கும் மேற்பட்ட மேலாளர்கள் மற்றும் மனித வள அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

               ஒரே விதமான கல்வித் தகுதி படைத்த இருவரில், சமுதாயம் மீது அக்கறை உள்ளவர்களுக்கும், நன்றாக உடை அணிந்தவர்களுக்கும் வேலை கிடைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. பொதுவாக உள்ள அம்சங்களில் இருந்து சற்று மாறுபட்டு சிந்திப்பவர்களையே, நிறுவன மேலாளர்கள் தேர்வு செய்கின்றனர்.

               உடல் ரீதியாக, நல்ல தகுதி படைத்தவர்கள், தற்போதைய நடைமுறை சூழலை நன்கு அறிந்தவர்கள், சமூக ஊடகங்களில் பங்கேற்பவர்கள், விளையாட்டுத் துறையில் ஆர்வம் போன்ற தகுதியை பெற்றுள்ளவர்களுக்கே வேலை கொடுப்பதில், முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

               வேலை கொடுப்பவர்கள், தொழில் ரீதியாக மட்டும் திறமை படைத்தவர்களை தேர்ந்தெடுப்பதில்லை; மாறாக, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு எல்லா விதத்திலும் தகுதி படைத்தவர்களைத் தான் தேர்ந்தெடுக்கின்றனர். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

முன்னுரிமை

                பதவி உயர்வு குறித்து கேட்பவர்களுக்கே, அது தொடர்பான முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதில், சில வகையினருக்கு, பதவி உயர்வுகள் மறுக்கப்படுகின்றன. அதாவது, "இது என்னுடைய வேலை இல்லை" என, மறுப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

               பணிக்கு தாமதமாக வருவது, மற்றவர்களது வேலையை பார்த்துவிட்டு, அதில் இருந்து ஆதாயம் அடைய முயலுவது, வேலை நேரம் முடிவதற்கு முன்னதாகவே வீட்டுக்கு சென்றுவிடுவது போன்ற காரணங்களாலும், பதவி உயர்வு கிடைப்பது தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் போகலாம்.

             ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.

                  நீங்கள் வேலைக்கு செல்ல தயார் என்றால், உங்களது தனிப்பட்ட திறமைகள் தான் அதன் திறவுகோல் என்கிறார், இந்த ஆய்வு நிறுவனத்தின் தலைவர், ரோஸ் மேரி ஹப்னர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive