அன்புள்ள ஆசிரியர்களுக்கு வணக்கம்.
நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு காலாண்டு பொதுத் தேர்வு வினாத்தாள்களுக்கு உரிய கீ ஆன்சர்களை பல்வேறு ஆசிரிய பெருமக்களும் நமது வலைதளத்திற்காக உடனுக்குடன் தயாரித்து வழங்கியுள்ளனர். தற்போதும் தொடர்ந்து அனுப்பியவண்ணம் உள்ளனர். மேற்கண்ட ஆசிரியகள் அனைவருக்கும் நமது நன்றிகள் பல!
இதேபோன்று 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, மற்ற இதர பொது வினாத்தாள்களுக்கும் உரிய கீ ஆன்சர்களை வழங்க விரும்பும் ஆசிரியர்களின் பட்டியலை நாம் தொகுக்க உள்ளோம். இதன் மூலம் மேற்கண்ட ஆசிரியர்களை உரிய நேரத்தில் நாம் நினைவூட்டி நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புகிறோம். எனவே விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்கள் விவரத்தை கீழே தரப்பட்டுள்ள படிவத்தில் நிரப்பவும்.
நமது பாடசாலை வலைதளத்தின் தன்னார்வலராக இணையவிருக்கும் ஆசிரியர்கள் அனைவரையும் இனிதே வரவேற்கிறோம்.
நன்றி!
அன்புடன் பாடசாலை குழு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...