இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி
ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினகுமார் கூறியதாவது: ஆசிரியர் பணிக்கு தகுதியான
பி.எட் முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த 30 ஆயிரம்
பட்டதாரிகளுக்கு கடந்த 2010&ம் ஆண்டு மே மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம்
சான்று சரிபார்ப்பு செய்தது. அதில் 22 ஆயிரம் பேர் ஆசிரியர்களாக
நியமிக்கப்பட்டனர்.
மீதம் உள்ள 8 ஆயிரம் பேருக்கு பணி
கிடைக்கவில்லை. இதற்கிடையே ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த அரசு அறிவித்தது.
சான்று சரிபார்ப்பு முடித்த 8 ஆயிரம் பேரில் 95 பேர் தங்களுக்கு பணி
நியமனம் வழங்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் வழக்கு
தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஜூலை 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
சான்று சரிபார்ப்பு முடித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதில்
இருந்து விலக்களித்தும், இனிவரும் பணியிடங்களில் இவர்களை நேரடி பணி நியமனம்
செய்யலாம் என்றும் நீதிபதிகள் எலிபி தர்மராவ், வேணுகோபால் ஆகியோர்
தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பை பின்பற்றி மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி
மணிக்குமார், கடந்த வாரம் 75 பேருக்கு பணி நியமனம் வழங்கலாம் என
தீர்ப்பளித்தார். இதையடுத்து, மேலும் 700 பட்டதாரிகள் சென்னை ஐகோர்ட்டில்
வழக்கு தொடர்ந்தனர். அதில் நாங்களும் மேற்கண்ட தேதியில் சான்று சரிபார்ப்பு
முடித்துள்ளோம்.
எங்களுக்கும் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து
விலக்களிக்க வேண்டும் என்று கேட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி
அரிபரந்தாமன், பட்டதாரிகள் ஆசிரியர் தகுதி தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்
என்று கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துவிட்டார். இந்த தீர்ப்பை
எதிர்த்து நாங்கள் விரைவில் மேல்முறையீடு செய்வோம்.இவ்வாறு ரத்தினகுமார்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...