Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல் செய்திக் குறிப்பு


              செப்டம்பர் 2013-ல் நடைபெறவுள்ள இடைநிலைத் தேர்விற்கு (10ம் வகுப்பு) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து தேர்வுத்துறையால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
           தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்தினை றறற.வனேபந.in என்ற இணையதள முகவரியில் 06.09.2013 (வெள்ளிக் கிழமை) முதல் 11.09.2013 (புதன்கிழமை) வரை இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வுக் கட்டணம் செலுத்தவேண்டிய கடைசி நாள் 12.09.2013 (வியாழக்கிழமை) மாலை 5.45 மணி வரை ஆகும்.

             விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் முந்தைய பருவங்களில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் அவர்கள் விருப்பப்பட்ட பாடங்களில் தற்போது தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

அ)     அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, அறிவியல் கருத்தியல் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே கருத்தியல் தேர்வெழுத விண்ணப்பிக்க தகுதியானவர்.    
ஆ)     செய்முறைத் தேர்வெழுதுவதிலிருந்து விலக்களிப்பு பெற்றவர்களும் அறிவியல் கருத்தியல் தேர்வினை தற்போது எழுத தகுதியுடையவராவார்.    
இ)     2012-13-ம் கல்வியாண்டில் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பிற்கு 80சதவீதம் வருகையுடன் விண்ணப்பித்து பயிற்சி பெற்றவர்கள் சிறப்பு நிகழ்வாக அனைத்து பாடங்களிலும் தேர்வவெழுத அனுமதிக்கப்படுவர். இவ்வகை தேர்வர்கள் 01.10.2013 அன்று 14 வயது பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.    
ஈ)     2013-14-ஆம் கல்வியாண்டில் (ஜுன் 2013) செய்முறைப் பயிற்சிக்கு விண்ணப்பித்து பயிற்சி பெற்றிருந்தாலும் செப்டம்பர் 2013 தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.    
உ)     எக்காரணம் கொண்டும் அறிவியல் பயிற்சி பெறாதவர்கள் கருத்தியல் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.    

               ஆன்-லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான நடைமுறை : செப்டம்பர் 2013-ல் நடைபெறவுள்ள இடைநிலைப் பள்ளிவிடுப்புச் பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்ததேர்வர்களிடமிருந்து www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்காண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் முழுமையாக விவரங்களைப் பூர்த்தி செடீநுது தமது புகைப்படத்தை பதிவேற்றம் (ருயீடடியன) செடீநுய வேண்டும். பிறகு, புகைப்படத்துடன் பதிவு செடீநுத விவரங்களுடன் கூடிய விண்ணப்பத்தினையும் மற்றும் தேர்வுக்கட்டணத்தினை பணமாகச் செலுத்த வேண்டிய பதிவுச் சீட்டினையும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.    
    ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டிய அலுவலகங்கள் பற்றிய விவரம் மற்றும் இறுதி தேதி  தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும்போது Place of Examination என்ற கலத்தில் தேர்வர் எந்த கல்வி மாவட்டத்தைக் குறிப்பிடுகிறார்களோ, அந்த மாவட்டத்திற்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் மற்றும் பதிவுச் சீட்டினை உரிய இணைப்புகளுடன் (மதிப்பெண் சான்றிதடிந நகல் / மாற்றுச்சான்றிதழ் / செய்முறைப் பயிற்சியில் கலந்துக்கொண்டமைக்கான சான்றிதழ் அல்லது அத்தாட்சியுடன்) நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.  தனித்தேர்வர்கள் உரிய மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் 06.09.2013 (வெள்ளிக்கிழமை) முதல் 12.09.2013 (வியாழக்கிழமை) (இடையிலுள்ள அரசு விடுமுறை நாட்கள் 08.09.2013 மற்றும் 09.09.2013 தவிர்த்து) மாலை 5.45-க்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.  மாற்றுத் திறனாளிகள் தங்கள் விண்ணப்பத்தினை நேரடியாகவோ அல்லது தனிநபர் மூலமாகவோ சம்மந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலகத்தில் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம்.    
                தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.      
                  தேர்விற்கு விண்ணப்பிற்கும்போது பதிவு செடீநுயும் அந்த மாவட்டத்திலேயே மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். பதிவு செடீநுயப்பட்ட மாவட்டத்தை விடுத்து பிறிதொரு மாவட்டத்தில் கட்டணம் செலுத்துதல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.    

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை :
தேர்வுக்கட்டணம் ரூ.125 /-
     
           தேர்வுக்கட்டணத்தை தேர்வர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அதே மாவட்டக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிவுச்சீட்டுடன் நேரில் 06.09.2013 முதல் 12.09.2013 மாலை 5.45 மணிவரை பணமாக மட்டுமே செலுத்துதல் வேண்டும்.
             தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது. தனித்தேர்வர்களின் தகுதி குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive