கல்வி நிறுவனங்களுக்கு விதித்த கல்விச்சேவை வரியை ரத்து செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை தனியார் பள்ளி தாளாளர்கள் கூட்டமைப்பு சங்க தலைவர் செந்தில்நாதன், செயலாளர் அபிலாஷ் கூறியதாவது:
கடந்த மாதம் மத்திய கலால் வரித்துறை சார்பில், கல்வி
நிறுவனங்கள் 12.36 சதவீதம் சேவை வரி செலுத்தும்படி நோட்டீஸ்
அனுப்பப்பட்டது. போக்குவரத்து, காணொலி கல்வி, சிறப்பு விளையாட்டுக்கள்,
கல்வி உதவித்தொகை போன்ற கல்விசார் வசதிகளுக்காக, மாணவர்களிடம் வசூலிக்கும்
தொகைக்கு சேவை வரி செலுத்த உத்தரவிட்டனர். இந்த உத்தரவு, மாணவர்கள்,
பெற்றோர், பள்ளி நிர்வாகங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு பலரும்
எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே சேவை வரியை ரத்து செய்யும்படி, மத்திய நிதி
அமைச்சரிடம் நாங்கள் முறையிட்டோம். மத்திய சுங்க வாரியத்திற்கு நேரில்
சென்று, மாணவர்களின் நிதிச்சுமை குறித்து தெரிவித்தோம். இதைத் தொடர்ந்து
அரசு சுற்றறிக்கை படி, இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு சேவை வரி
கிடையாது என தெளிவுபடுத்தி உத்தரவிட்டுள்ளது.
இதற்கு காரணமான அரசியல் தலைவர்கள், எம்.பி.,க்களுக்கு நன்றி
தெரிவிக்கிறோம். இதனால் மாணவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் வரை நிதிச்சுமை
குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...