புதிய பென்சன் மசோதா லோக்சபாவில்
நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களுடன் மசோதா
லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் புதன்கிழமை ஓய்வூதிய மசோதா மீதான
விவாதம் நடைபெற்றபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில்
ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. எனவே, மதியம் 2 மணி வரை
அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்பின்னர் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்திற்கு
நிதி மந்திரி ப.சிதம்பரம் பதில் அளித்து பேசினார். அப்போது, புதிய ஓய்வூதிய
திட்டத்தில் 28 மாநிலங்கள் இணைய ஒப்புதல் அளித்திருப்பதாகவும், ஏராளமான
மக்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்க இத்திட்டம் உதவியாக இருக்கும் என்றும்
சிதம்பரம் கூறினார்.
இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த
திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. அதன்பின்னர் பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா
நிறைவேறியது. இதன்மூலம் தொழிலாளர்கள் ஓய்வூதிய நிதியை தனியார் நிறுவனங்கள்
நிர்வகிக்க முடியும். மேலும், ஓய்வூதிய நிதியில் 26 சதவீத வெளிநாட்டு நேரடி
முதலீட்டுக்கும் இந்த மசோதா அனுமதி அளிக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...