'மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி, பள்ளி வளாகத்தில் பழைய கட்டடங்கள்
இருந்தால், அவற்றை, உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்" என
பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.
பள்ளி வளாகத்தில், கட்டடப் பணிகள் நடந்தால், அந்த பகுதிகளுக்கு, மாணவர்
செல்லாதவாறு, ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில்,
மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், திறந்த நிலை கிணறுகள்,
நீர்நிலை தொட்டிகள் இருந்தால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை, உடனடியாக
எடுக்க வேண்டும்.
பள்ளியில், இடிந்துவிழும் நிலையில், பழைய கட்டடங்கள் இருந்தால்,
உடனடியாக இடித்து, தரைமட்டமாக்க வேண்டும். தாழ்வான நிலையில், உயர் மின்
அழுத்தம் உள்ள மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் இருந்தால், உடனே
அப்புறப்படுத்த வேண்டும்.
மாணவர்கள், ஓட்டுனர் உரிமம் இன்றி, இருசக்கர வாகனங்களை ஓட்டிவருவதாக,
அரசுக்கு தகவல்கள் வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளை, முற்றிலும் தடுத்து
நிறுத்த, தலைமை ஆசிரியர்கள், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு,
இயக்குனர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...