மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் சீனியர் மாணவியரின்
ராகிங் கொடுமையால் 5ம் வகுப்பு மாணவி பலியானதையடுத்து, பள்ளியைத்
தாக்கியதாக, ஒன்பது பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, அந்த பள்ளியில் படிக்கும் மாணவியரின் பெற்றோர்,
பள்ளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். சம்பவம் தொடர்பாக பள்ளி
முதல்வர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பள்ளி மீது தாக்குதல் நடத்திய சம்பவம்
தொடர்பாக, ஒன்பது பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதில், ஐந்து பேர்
தாக்குதல் நடத்தப்பட்ட பள்ளியோடு, எவ்விதத்திலும் தொடர்பு இல்லாதவர்கள்.
மீதமுள்ள நான்கு பேரின் குழந்தைகள், இப்பள்ளியில் படிக்கின்றனர். இதில்,
இருவர் பெண்கள். கைது செய்யப்பட்டவர்கள், நேற்று கூடுதல் மாவட்ட
நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நேற்று முன்தினம் மேற்குவங்க கவர்னர், எம்.கே.நாராயணன்
விடுத்த அறிவிப்பில், "பள்ளி மீது தாக்குதல் நடத்திய பெற்றோரின் செயல்
வருத்தமளிப்பதாகவும், குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டிய
பெற்றோரே ஒழுங்கு தவறி நடப்பது சரியா? இப்படியிருந்தால்,
குழந்தைகளிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்" என, கேள்வி எழுப்பினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...