தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாமல் இடையில்
நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் வரும் 9ம் தேதி
விழிப்புணர்வு நாடகம், பேரணி, கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளதாக
அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி சரோஜா
தெரிவித்தார்.
இதில் அனைத்து வட்டார பகுதியில் 1145 மாணவர்கள் நிரந்தர
பள்ளிகள், சிறப்பு பயிற்சி மையம், நீண்ட கால சிறப்பு பயிற்சி மையம்
போன்றவற்றில் அவர்களது வயதிற்கு ஏற்ப அனைவருக்கும் கட்டாய
கல்விச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 17 இடங்களில் நீண்ட கால
மையங்களாக செயல்பட்டு வருகிறது.7 இடங்கள் குறுகியகால மையங்களாக செயல்பட்டு
வருகிறது. கோவில்பட்டி, விளாத்திகுளம், வேம்பார், கயத்தார் ஆகிய இடங்களில்
தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் உறைவிட மையங்களாக செயல்பட்டு
வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 95 மாணவர்களை மீண்டும் பள்ளியில்
சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டதில் அதில் 50 மாணவர்கள் தற்போது வெளியே
சென்று விட்டனர். மீதியுள்ள 45 மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான
முயற்சிகள் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இடையில் நின்ற மாணவர்களுக்கு கல்வி கற்றுக்
கொடுக்க கூடிய அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 31
கல்வித்தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி நேற்று தூத்துக்குடி சி.வ. அரசு
துவக்கப்பள்ளியில் நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர்களான கருத்தாளர்கள்
தேவபிரபு, சேகர், மெல்சியா, முத்துக்குமார், ஆனந்த் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் கூடுதல் சி.இ.ஓ சரோஜா பேசியதாவது: தூத்துக்குடி
மாவட்டத்தில் பள்ளியில் இடையில் நின்ற 45 மாணவர்களையும் மீண்டும்
பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து விட வேண்டும். இது நமது பொறுப்பாகும்.
இடையில் நின்ற மாணவர்கள் பள்ளிகளில் எப்படி படிக்கிறார்கள் என்பதை அடிக்கடி
சென்று கண்காணித்து கொள்ள வேண்டும்.
பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்ற மாணவர்களை மீண்டும்
பள்ளியில் சேர்க்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளன. வரும்
9ம் தேதி (அக்டோபர்) அனைவருக்கும் கல்வி இயக்கம், பி.ஏ.டி தொண்டு
நிறுவனம், சைல்டு லைன் ஆகியவை இணைந்து தருவைகுளம் பகுதியில் விழிப்புணர்வு
நாடகம், கலைநிகழ்ச்சிகள், பாடல்கள், மாணவ, மாணவிகளின் பேரணி நடத்தப்பட
உள்ளது. இவ்வாறு சரோஜா தெரிவித்தார்.
நேற்று துவங்கிய பயிற்சி நாளை வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...