எந்தத் துறை வேலை வாய்ப்பென்றாலும், அது நிர்வாகத் துறை வாய்ப்புகளே
என்றாலும் இன்று சர்வசாதாரணமாக இன்ஜினியரிங் பட்டதாரிகள் கடும் போட்டியை
ஏற்படுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது பிற சாதாரண பட்டப்படிப்பு
முடித்திருப்பவர்கள் தான்.
எம்.இ., எம்.டெக்., படித்திருப்பவர்களை விட பி.இ.,
பி.டெக்., படித்திருப்பவர்கள் வளைந்து கொடுப்பவர்களாக இருப்பது தான்
இதற்கான அடிப்படைக் காரணம் என்றும் சர்வே கருதுகிறது.
இன்ஜினியரிங் பட்ட மேற்படிப்பு முடித்திருப்பவர்களிடம்
பட்டதாரிகளை விட பெரிதும் எதிர்பார்க்க முடிவதில்லை என்றும் கொஞ்சம்
கூடுதலாக இவர்கள் நிதானமாக செயல்படுபவர்களாக இருப்பது ஒன்று தான் இவர்களின்
பிளஸ் என்றும் நிறுவனங்கள் கருதுகின்றனவாம்.
எம்.டெக்., போன்ற படிப்புகளை முடித்திருப்பவர்கள் ஆய்வு
தொடர்பான வேலைகளையே விரும்புவதும் இவர்களை நிறுவனங்கள் புறக்கணிப்பதான்
முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. தற்போதைய சூழலில் 10 பி.இ.,
பி.டெக்.,குகளுக்கு மத்தியில் ஒரேயொரு பட்ட மேற்படிப்பு முடித்திருப்பவர்
மட்டுமே பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்.
பட்ட மேற்படிப்பு முடிப்பவர்களில் 40 சதவீதத்தினர் மட்டுமே
கேம்பஸ் மூலமாக பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். வாரங்கலில் உள்ள
என்.ஐ.டி.,யில் 720 பி.டெக்., மாணவர்களில் 80 சதவீதத்தினருக்கும் மேலாக பணி
வாய்ப்பைப் பெற்றனர். ஆனால் இதே கல்வி நிறுவனத்தில் 500 பட்ட மேற்படிப்பு
மாணவர்களில் 150 பேர் மட்டுமே பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இந்த காரணத்தினால் சமீப காலமாக பல கல்வி நிறுவனங்கள் இரட்டை
இன்ஜினியரிங் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இவற்றுக்கு அதிக
வரவேற்பும் பணி வாய்ப்பும் உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...