Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செல்போன் மூலம் கற்பித்த ஆசிரியருக்கு குடியரசுத் தலைவர் விருது


           மாணவர்களுக்கு செல்போன் போன்ற நவீன கருவிகளைப் பயன்படுத்தி கற்பித்ததற்காக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் எஸ்.திலீப்புக்கு நல்லாசிரியர் (ஐ.சி.டி.) விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை வழங்கினார்.

           புதுதில்லியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் எஸ்.திலீப் உள்ளிட 9 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் எஸ்.திலீப். இவர் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கிறார்.

         தமிழகத்திலிருந்து திலீப் தவிர, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குளோரி ரோஸ்லின் என்கிற அறிவியல் ஆசிரியருக்கும் ஐ.சி.டி. விருது கிடைத்துள்ளது. குளோரி ரோஸ்லின் பர்கூரில் உள்ள கன்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக உள்ளார்.

            கேமிரா மொபைல் போன் இருந்தாலே வகுப்பறையை தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தும் வகுப்பறையாக (ஐஇப இப்ஹள்ள்ழ்ர்ர்ம்) மாற்றிவிடலாம் என்கிறார் திலீப்.

           செல்போனில் உள்ள புதிய சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆங்கிஹல இலக்கணங்களைக் கற்றுத்தருகிறார்.

                     மாணவர்களை ஆங்கிலப் பாடல்களை வாசிக்க செய்து செல்போனில் பதிவுசெய்வேன். அதை மீண்டும் வகுப்பறையில் உள்ள எல்சிடி புரஜெக்டரில் திரையிடுவேன். தங்களது உச்சரிப்புகளை பெரிய திரையில் மீண்டும் கேட்கும் மாணவர்கள், பிழைகளைத் தாங்களாகவே சரிசெய்துகொள்வார்கள் என்று திலீப் கூறினார்.

                 மனப்பாடப் பகுதிகள், ஆங்கிலப் பாடப்பகுதிகள் ஆகியவற்றை வகுப்பறையில் செல்போனில் ஒலிக்கச் செய்வதன் மூலம் மாணவர்கள் மனதில் அவை நன்றாக பதிய வைக்க முடியும். மாணவர்களையே நேரடியாக டிஜிட்டல் கேமராவில் புகைப்படம் எடுக்கச் செய்வேன். அந்தப் புகைப்படங்கள் வாயிலாக அவர்களுக்கு பல்வேறு கதைகளை வகுப்பறையில் கற்றுத்தருவேன் என அவர் மேலும் கூறினார்.

               இந்த வகுப்புகள் யு டியூப்பிலும் (வர்ன் பன்க்ஷங்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலும் ஆங்கில மொழி கற்றுத்தரும் விடியோக்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும். ஆனால், இவரது விளக்க உரைகள் தமிழிலும் இருப்பதால் தமிழகத்தில் வேறு பகுதிகளிலும் இவரது விடியோக்களை ஆங்கில வகுப்புகளில் பயன்படுத்துகின்றனர்.

                   அதோடு இவரது பள்ளிக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் தனியே வலைப் பதிவை ஏற்படுத்தியுள்ளார். இதன்மூலம், ஆங்கிலம் தொடர்பான வினாக்கள் மற்றும் ஆங்கில வகுப்புகள் தொடர்பான பல்வேறு அம்சங்களையும் ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

                நாடு முழுவதிலும் இருந்து 67 ஆசிரியர்கள் இந்த விருதுக்காக இறுதிசெய்யப்பட்டனர். இதில் 9 பேருக்கு நல்லாசிரியர் (ஐ.சி.டி.) விருதுகள் வழங்கப்பட்டன.

                      இந்த விருதுடன் பதக்கம் மற்றும் லேப்-டாப், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். மாணவர்களுக்குப் பயன்படும் சாப்ட்வேர் சி.டி.க்களும் வழங்கப்படும்.




1 Comments:

  1. செய்தி பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி
    திலிப் ,ஆசிரியர்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive