பள்ளி கல்வித்துறைக்கு, கூடுதல் பொறுப்பேற்றுள்ள, அமைச்சர் பழனியப்பன்,
துறை செயல்பாடு குறித்து, அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து, பழனியப்பன், முதல்
முறையாக, அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். டி.பி.ஐ., வளாகத்தில்
உள்ள, பாடநூல் கழக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை
செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி,
பாடநூல்கழக நிர்வாக இயக்குனர், மகேஸ்வரன், பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர
முருகன், தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் உட்பட பல்வேறு அதிகாரிகள்,
கூட்டத்தில் பங்கேற்றனர்.
பள்ளிக் கல்வித்துறை சார்ந்து, முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும்
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, துறை சார்ந்து அறிவிக்கப்பட்ட திட்டங்கள்
ஆகியவை குறித்தும், மாணவ, மாணவியருக்கான நலத்திட்டங்கள் குறித்தும் மற்றும்
பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள்
குறித்தும், அமைச்சர், விரிவாக ஆய்வு செய்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...