ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 65ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என டெல்லி அரசை ஆசிரியர்கள் சங்கம் வற்புறுத்தி வந்தது.
இதனை ஏற்று, ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை
65ஆக உயர்த்தி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மீதான
அதிகாரபூர்வ அறிவிப்பு ஆசிரியர் தினமாக செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய உத்தரவின் மூலம் டெல்லி அரசு
மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள்
மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்று பலன் அடைவார்கள்.
டெல்லி சட்டசபை தேர்தல் நடப்பதற்கு சில
மாதங்களே உள்ள நிலையில் சுமார் 3 லட்சம் குடும்பங்களின் ஓட்டுகளை
கவர்வதற்காக இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கருத்து
தெரிவித்துள்ளன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...