தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இரண்டாம் நாள் சாலை மறியல் போராட்டம் 4550 ஆசிரியர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 5
நாள்கள் தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்துகிறது. இன்று இரண்டாம் நாள்
சாலை மறியல் போராட்டம் ஆசிரியைகளின் முன்னெடுப்பில் வெற்றிகரமாக
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் புறப்பட்டு கோட்டை நோக்கி சென்று
சாலைமறியலில் 4550 ஆசிரியர் ஆசிரியைகள் கலந்துகொண்டு சிறை செல்லும் செயல்
வீரர்களாக, கோரிக்கைகளை வென்றெடுக்க துணிந்து நிற்கும் கேடயமாக கைதாகினர்.
கைதான ஆசிரியர்கள் ராஜரெத்தினம் ஸ்டேடியத்தில்
அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள போராட்ட பொறுப்பளர்களிடம் பேசியதில்
மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் போன்று அதே தகுதி உள்ள
தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பெறுகின்ற சம்பளம் மிக
குறைவு. தமிழ்நாட்டில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தாங்கள் பெறவேண்டிய
சம்பளத்தைவிட மாதம் ஒன்றுக்கு ரூபாய் 9000 குறைவாக பெறுகின்றனர். ஒரே பணி
அனால் சம்பளம் மட்டும் குறைவு. இதனை மாற்றி இடைநிலை ஆசிரியர்களுக்கு
அடிப்படை ஊதியம் 9300 நிர்ணயம் செய்யப்பட வேண்டும். CPS எனப்படும்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும்
உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கின்ற சாலை மறியல்
போராட்டத்தில் அலை கடலென எராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...