முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு
மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை
நிரப்ப, கடந்த ஜூலையில், போட்டி தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வை
எழுதினர். தேர்வின், தற்காலிக விடைகளை வெளியிட்ட சிறிது நாட்களில்,
அனைத்து பாடங்களுக்கும், தேர்வு பட்டியலையும், டி.ஆர்.பி., தயாரித்தது.
இதற்கிடையே, தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகளில் பிழை இருந்ததாக
கூறி, மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, சென்னை உயர் நீதிமன்ற, மதுரை
கிளையில் வழக்கு தொடர்ந்தார். தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்க,
அவர் கோரியுள்ளார். இந்த பிரச்னையால், இதர பாடங்களுக்கான முடிவை
வெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "தமிழ் பாட பிரச்னையில்,
விரைவில், ஒரு முடிவை எடுத்து, கோர்ட்டில் தெரிவிக்க உள்ளோம். எனவே, 30ம்
தேதிக்குள், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட திட்டமிட்டு
உள்ளோம். டி.இ.டி., தேர்வு முடிவுகள், இம்மாத இறுதிக்குள்ளாகவோ அல்லது
அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியாகும்" என தெரிவித்தது.
adhu entha 30 nu sonna nallarukkum. Varum aana varadhu! 10 natkalil, oriru natkalil, viraivil idhellam varum ana varadhu!
ReplyDeleteதேர்வு முடிவை தாமத படுத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது மற்ற பாட தேர்வர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
ReplyDeleteSiva major is english my weightage is 75 . Community is sc. Is there any chance to get a job? 9786861179
ReplyDelete