Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் எம்ஃபில் படித்தால் 3-ஆவது ஊக்க ஊதியம் உண்டு

                               எம்ஃபில் படிப்புக்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்கலாம் என்ற உத்தரவு அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

            மதுரை சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே. நாகசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். மணிக்குமார் இவ்வாறு உத்தரவிட்டார்.

                  உத்தரவு விவரம்: ஆசிரியர்களின் அறிவை மேலும் வளர்த்துக் கொள்ளும் வகையில் கூடுதல் கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. மனுதாரர் எம்ஃபில் பட்டப்படிப்பு பெற்றதற்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க கோரியுள்ளார். ஏற்கெனவே எம்ஃபில் படிப்புக்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                     அதையே மதுரை மாவட்ட கல்வி அலுவலரும் பின்பற்றி ஊக்க ஊதியம் வழங்கியிருக்க வேண்டும். நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில் அரசு அவ்வப்போது உத்தரவுகளை வெளியிடுகிறது. 

               இந்த விஷயத்தைப் பொருத்தவரையிலும் ஊக்க ஊதியம் கோரிய மனுதாரரின் மனுவை நிராகரித்த மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 

                    மனுதாரர் மீண்டும் ஊக்க ஊதியம் பெறுவதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். அதை மாவட்ட கல்வி அதிகாரி முறையாகப் பரிசீலித்து  நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு உத்தரவுகளைப் பின்பற்றி தகுந்த முடிவு எடுக்க வேண்டும். 

      உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகள் தனிநபர்களுக்காக பிறப்பிக்கப்படுபவையாக இருந்தாலும், அதன் உள்பொருள் எல்லாருக்கும் பொதுவானது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
           மனுதாரர் நாகசுப்பிரமணியம் தனது மனுவில், உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 2013, மார்ச் 28-இல் கே. லதாதேவி என்பவருக்கு எம்ஃபில் படிப்புக்காக 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்க அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.    

                     அந்த உத்தரவை பின்பற்றி தனக்கும் எம்ஃபில் படிப்புக்கான 3-ஆவது ஊக்க ஊதியம் கேட்ட போது, அரசு உத்தரவு தனிநபருக்கானது என்று கூறி மாவட்ட கல்வி அதிகாரி நிராகரித்து உள்ளதாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.
நன்றி : தினமலர்

14 Comments:

  1. பட்டதாரி ஆசிரியர்கள் உயர்கல்விக்காக 2 ஊக்க ஊதியம் பெற்றாலும் கூட எம்.பில். படிப்புக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.
    உயர்கல்விக்காக 2 ஊக்க ஊதியம் பெற்று வரும் பட்டதாரி ஆசிரியர்கள் எம்.பில். படிப்புக்காக தனியாக ஊக்க ஊதியம் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்க ஐகோர்ர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. அத‌னடிப்படையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் தனியாக ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.
    பொதுவாக ஒரு உத்தரவு பிறப்பிக்கும்போது, வழக்கு தொடர்ந்த நபருக்கு மட்டும் தான் பொருந்தும் என்று அதிகாரிகள் கருதுவது தவறானது. ஒவ்வொருவரையும் கோர்ட்டுக்கு சென்று உத்தரவு பெற்று வரும்படி கூறுவது சரியல்ல.
    தேவையில்லாமல் கோர்ட்டுக்கு செல்லும்படி கூறுவதால் தேவையில்லாமல் கோர்ட்டு நேர்ரமும் வீணாகிறது. எனவே, ஏற்கனவே உள்ள அரசாணைப்படி மனுதாரர்களுக்கும் எம்.பில். படிப்புக்காக 4 வாரத்துக்குள் தனியாக ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    நன்றி திருச்சி தினத்தந்தி 06.09.2013 ப.25

    தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அரசாணை பாடசாலையில் பதிய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. பட்டதாரி ஆசிரியர்கள் உயர்கல்விக்காக 2 ஊக்க ஊதியம் பெற்றாலும் கூட எம்.பில். படிப்புக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.
    உயர்கல்விக்காக 2 ஊக்க ஊதியம் பெற்று வரும் பட்டதாரி ஆசிரியர்கள் எம்.பில். படிப்புக்காக தனியாக ஊக்க ஊதியம் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்க ஐகோர்ர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. அத‌னடிப்படையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் தனியாக ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.
    பொதுவாக ஒரு உத்தரவு பிறப்பிக்கும்போது, வழக்கு தொடர்ந்த நபருக்கு மட்டும் தான் பொருந்தும் என்று அதிகாரிகள் கருதுவது தவறானது. ஒவ்வொருவரையும் கோர்ட்டுக்கு சென்று உத்தரவு பெற்று வரும்படி கூறுவது சரியல்ல.
    தேவையில்லாமல் கோர்ட்டுக்கு செல்லும்படி கூறுவதால் தேவையில்லாமல் கோர்ட்டு நேர்ரமும் வீணாகிறது. எனவே, ஏற்கனவே உள்ள அரசாணைப்படி மனுதாரர்களுக்கும் எம்.பில். படிப்புக்காக 4 வாரத்துக்குள் தனியாக ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    நன்றி திருச்சி தினத்தந்தி 06.09.2013 ப.25

    தீர்ப்பில் கூறப்பட்டுள்ள அரசாணை பாடசாலையில் பதிய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. please publish the court order.

    ReplyDelete
  4. THANK U TO மதுரை சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே. நாகசுப்பிரமணியன் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள்.

    ReplyDelete
  5. 3வது ஊக்க ஊதிய உயர்வு வழங்கியது வரவேற்க தக்கது என்றாலும்.எந்த தேதி முதல் பணப்பலன் வழங்க வேண்டும் என்பது குறித்து தெளிவு வழங்கினால் வீணான குழப்பம் இருக்காது.
    அன்புடன்
    முபா

    ReplyDelete
  6. please publish court order sir

    ReplyDelete
  7. தீர்ப்பில் கூறப்பட்ட நீதி மன்ற ஆணைய வெளியிடவேண்டுகிறேன்

    ReplyDelete
  8. PLEASE THE COURT ORDER AND GOVERNMENT PROCEEDING ABOUT THE 3RD INCENTIVE

    ReplyDelete
  9. IF I DO M.PHIL IN THIS ACADAMIC YEAR CAN I GET THIRD INCENTIVE AS A SGT TEACHERS?

    ReplyDelete
  10. THANK YOU !!! KINGLY SEND THE COURT ORDER TO MY E- MAIL
    shanvchss@gmail.com

    ReplyDelete
  11. can the SG Teachers also claim the third incentive for M.Phil?
    If able, please mail to me the court order to kkamal.kannan1@gmail.com

    ReplyDelete
  12. Thanks a lot.can u pls send the court order and g.o about 3rd incentive to devibaala77@gmail.com?and pls make it clear from which it can be claimbed?

    ReplyDelete
  13. Please attach the court order and g.o we will be thankful to you sir!!!!!!!

    ReplyDelete
  14. Please attach the court order and g.o we will be thankful to you sir!!!!!!!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive