பிளஸ்-2 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் தயாராக
உள்ளது. இந்த பாடத்திட்டம் 2015-2016-ம் ஆண்டு முதல்
அமல்படுத்தப்படுகிறது.புதிய பாடத்திட்டம் தமிழக அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு
ஒரு முறை அப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை
அறிமுகப்படுத்தி உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-2
பாடத்திட்டம் தயாரித்து 6 வருடங்கள் ஆகிவிட்டன. எனவே புதிய பாடத்திட்டம்
தயாரிக்க ஒவ்வொரு பாடத்திற்கும் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டு தனித்தனி குழுவினர்கள் அந்த பாடத்திட்டத்தை தயாரித்தனர்.
பின்னர் அந்த பாடத்திட்டம் கல்வியாளர்கள், பொதுமக்கள் கருத்துக்களை அறிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏராளமானவர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஏற்கக்கூடிய கருத்துக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இறுதிசெய்யும் கூட்டம்
பாடத்திட்டம் இறுதி செய்வதற்கான கூட்டம் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. பாடத்திட்டம்
இறுதி செய்யப்பட்டு பின்னர் பாடத்திட்டம் அடிப்படையில் பாடப்புத்தகங்கள்
எழுதப்படவேண்டும். இந்த பாடப்புத்தகங்கள் எழுதி முடித்து பாடப்புத்தகங்கள்
அச்சடிக்கப்படவேண்டும். எனவே வருகிற கல்வி ஆண்டில் இந்த பாடப்புத்தகங்கள்
அமல்படுத்தப்படாது.
இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் 2015-2016-ம் கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...