"விரைவில் நடக்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, இன்று முதல், 10ம் தேதி
வரை, இணைய தளம் வழியாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்" என தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.
தேர்வர்கள், விவரங்களை பூர்த்தி செய்வதுடன், தங்கள் புகைப்படத்தை,
இணையதளத்தில், "அப்லோட்" செய்ய வேண்டும். புகைப்படத்துடன் கூடிய
விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய, "செலானையும்"
பதவிறக்கம் செய்ய வேண்டும்.
தேர்வு இடத்தில், எந்த கல்வி மாவட்டத்தை குறிக்கின்றனரோ, அந்த
மாவட்டத்திற்குரிய மாவட்ட கல்வி அலுவலகத்தில், பதிவிறக்கம் செய்த
விண்ணப்பத்தையும், கட்டண ரசீதையும் சமர்ப்பிக்க வேண்டும். வரும் 8,9 ஆகிய
தேதிகளை தவிர்த்து, 11ம் தேதி மாலை, 5:45 மணி வரை, விண்ணப்பங்களை
சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...