கூட்டுறவு துறையில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு,
நியமன ஆணை பெற்றும், ஆறு மாதமாக பணியில் சேர முடியாமல், 150 பேர்,
அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகக் கூட்டுறவுத் துறையில், இளநிலை ஆய்வாளர்
பணியிடங்களை நிரப்ப, 2012 ஆக., 4ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., மூலம்,
போட்டித் தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் உள்ள, 150 பணியிடங்களை நிரப்ப
நடந்த தேர்வில், 6 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வில் வெற்றி
பெற்றவர்களுக்கு, மார்ச் மாதம், 11ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு நடந்தது.
இதில் பங்கேற்றவர்களில், தேர்ச்சி பெற்ற, 150 பேருக்கு, அப்போதே பணி நியமன
உத்தரவு வழங்கப்பட்டது.
அப்போது, பணியிடம் குறித்த தகவல், கூட்டுறவுத்
துறை மூலம் தெரிவிக்கப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள்
கூறியுள்ளனர். இதை நம்பி, அப்பாயின்ட்மென்ட் ஆர்டருடன், 150 பேரும்,
ஊருக்கு திரும்பினர். சில மாதங்கள் கடந்தும், அவர்கள், எந்த இடத்தில்
பணியில் சேருவது என்பதற்கான உத்தரவு வரவில்லை என்பதால், அதிர்ச்சி
அடைந்தனர்.
அவர்கள், டி.என்.பி.எஸ்.சி., மற்றும்
சென்னையில் உள்ள கூட்டுறவுத் துறை செயலர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட போது,
டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகளோ, "தேர்வு நடத்தி, தகுதி உள்ளவர்களுக்குப்
பணி நியமன உத்தரவு வழங்குவது மட்டுமே, எங்கள் பணி; அதை நாங்கள் செய்து
விட்டோம்; உங்களுக்கு எந்த பணியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பதை,
கூட்டுறவுத் துறை தான் தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.
காத்திருங்கள்: கூட்டுறவுத் துறை அதிகாரிகளோ,
"விரைவில் பணியிடம் ஒதுக்கப்படும். அதுவரை, காத்திருங்கள்" என கூறி
வருகின்றனர். கூட்டுறவுத் துறையில், இளநிலை ஆய்வாளர் பணிக்குத் தேர்வு
செய்யப்பட்டும், ஆறு மாதமாக, பணியில் சேர முடியாமல், 150 பேர் தவித்து
வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...