Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET தேர்வுக்கு "சூப்பர் டிப்ஸ்"



              ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) நேர மேலாண்மை மிகவும் அவசியம் என, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாச்சலம் கூறினார்.


* ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தயாராவோர், பதட்டம் இல்லாமல் படித்து தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இனி, புதிய பாடங்களை படித்தல் கூடாது. ஏற்கனவே படித்துள்ளவற்றையே திருப்புதல் செய்ய வேண்டும்.

* தமிழில் நூலாசிரியர்கள், தமிழ் எண்கள், பா வகை, யாப்புவில் தளை, அணி, ஆகுபெயர்களை படிக்க வேண்டும்.

* குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தலில், கோட்பாடுகளை கூறியவர்கள், பயன்பாடு, தோன்றிய ஆண்டு, உளவியலில் பல்வேறு பிரிவுகளை தெரிந்து கொள்வது அவசியம்.

* ஆங்கிலத்தில் சுருக்கு வடிவத்தின் விரிவாக்கம், ஆங்கிலச் சொல்லுக்கு இணையான, எதிர்மறை சொற்கள், பறவை, விலங்குகளின் ஒலிகள், அவற்றின் பாலினங்கள், அவற்றின் கூட்டப் பெயர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

* கணக்கில் எண்ணியல், பரப்பளவு, கனஅளவு, தனிவட்டி, கூட்டுவட்டி, சராசரி, புள்ளியியல் பாடங்களில் முக்கிய சூத்திரங்கள் தெரிவது அவசியம்.

* இயற்பியலில் அலகுகள், விதிகள், பயன்கள் தெரிந்து இருக்க வேண்டும். வேதியியலில் தனிமங்களின் குறியீடுகள், சேர்மங்களின் பயன்கள், வேதிப்பெயர்கள், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வேதிச் சேர்மங்களை படிக்க வேண்டும்.

* தாவரவியலில் செல்கள், வைரஸ், பாக்டீரியா போன்ற பகுதிகளை நினைவுபடுத்தவும்.

* உலக புவியியலில் கோள்களின் சிறப்பம்சங்கள், இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள், உலகில் நடைபெற்ற முக்கிய பேரழிவுகள், நடந்த ஆண்டு, இந்திய மலைகள், காடுகள் தொடர்புடைய பகுதிகளை அறிந்திருக்க வேண்டும்.

* மனித உடலியல் பகுதியில் நோய்கள், வைட்டமின்கள், ரத்தசெல்கள் பற்றி அறிய வேண்டும்.

* வரலாறு பகுதியில் முக்கிய போர்கள், நடந்த ஆண்டு, சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள், நூல், நூலாசிரியர்கள், இயக்கங்களை தோற்றுவித்தவர்கள்.

* அரசியல் அமைப்பின் முக்கிய ஷரத்துகள் (குறிப்பாக குழந்தை கல்வி தொடர்பானவை), அட்டவணைகள், சட்ட திருத்தங்கள் அறியவேண்டும்.

* சூழ்நிலையியல் பாடத்தில் சுற்றுச்சூழல் தொடர்புடைய மாநாடுகள், தினங்கள், சட்டங்கள், கல்வி தொடர்புடைய தினங்கள், தேசிய நினைவுச் சின்னங்களை நினைவுபடுத்த வேண்டும்.

* விண்வெளி தொடர்புடைய நிகழ்வுகள், ஆண்டுகள், மையங்கள், ஊராட்சி நிர்வாகம், தமிழக வரலாறு தொடர்புள்ள நிகழ்வுகளை அறிந்திருப்பது அவசியம்.

கடந்த ஆண்டு நடந்த தேர்வுகளில், பல கேள்விகளுக்கு பதில் தெரிந்து இருந்தும், நேர மேலாண்மை தெரியாததால் பலர் தோல்வி அடைந்தனர். எனவே, வீட்டிலேயே மாதிரி தேர்வுகளை எழுதிப் பழகலாம்.

150 வினாக்களில், முதலில் நன்கு தெளிவாக தெரிந்த விடைகளை எழுதியபின், மற்ற வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இத்தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் பிடித்தம் கிடையாது. எனவே, எல்லா வினாக்களுக்கும் விடையளித்து விடவும்.

தேர்வுக்கு முன்தினம், நன்கு தூங்க வேண்டும். தேர்வு நாளில் ஹால் டிக்கெட், பால் பாயின்ட் பேனாவை முதலிலேயே எடுத்து வைத்து, கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க வேண்டும்.

நேர மேலாண்மைக்கு கடிகாரம் அணிந்து செல்வது நல்லது. தேர்வு மையத்தை முன்தினமே அறிந்து வைத்திருப்பது நல்லது. எல்லாவற்றையும்விட, "என்னால் வெல்ல முடியும்" என்ற நம்பிக்கை இருப்பது அவசியம். இவ்வாறு தெரிவித்தார். தொடர்புக்கு 90470 34271




2 Comments:

  1. computer science tet than illayeaaa,,???irvarkaluku tet vaippu iruku,,,ana yangalukku??????????????????????????

    ReplyDelete
  2. all the best to all,,,,,by computer science bed students..............

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive