"ஆசிரியர் தகுதி தேர்வில், பார்வையற்ற ஆசிரியர்கள் தகுதி பெற, 40 சதவீத மதிப்பெண்களை, குறைந்தபட்ச மதிப்பெண்களாக நிர்ணயிக்க வேண்டும்" என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வில் பார்வையற்ற ஆசிரியர்கள் தகுதி பெற, 40 சதவீத மதிப்பெண்களை, குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும். பார்வையற்ற முதுகலை பட்டதாரிகளை, கல்லூரி உதவி பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
பார்வையற்றோர் சிறப்பு பள்ளிகளில் காலியாக உள்ள, ஆசிரியர் பணியிடங்களை, பார்வையற்றவர்களை கொண்டு விரைந்து நிரப்ப வேண்டும். பார்வையற்றவர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி பெறுவதற்கு நடைமுறையிலுள்ள விதிமுறைகளை தளர்த்தி, பணி நியமனத்தின் போது சமர்ப்பிக்கப்படும் மருத்துவ சான்றிதழை அடிப்படையாக கொண்டு வழங்க வேண்டும்.
வேலை இல்லாத பார்வையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் தொகை, 450 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (இன்று) கவர்னர் மாளிகை முன், ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...