TET HALL TICKET MISTAKES? டி.இ.டி ஹால் டிக்கெட்டில் பிழையா ? என்ன செய்யலாம்?
வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 18ஆம் தேதி நடைபெறும் டி.இ.டி முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் கடந்த 6ஆம் தேதி இணையதளத்தில் வெளியானது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் டவுன்லோட் செய்த பின் பார்த்ததில் அதில் தேர்வு மைய மாவட்டம், பெயர், புகைப்படம் போன்ற பதிவுகள் மாறி வந்ததால், தேர்வர்கள் அச்சம் அடைந்தனர்.
இது குறித்து பல தரப்பு நம் இணையதளத்துக்கு தகவல் அனுப்பவே, நேற்று இத்தகவலை நாம் பதிவு செய்தோம். இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம், தனி அலுவலரை நியமித்து இப்பிரச்சனைகளை போக்கி வருகிறது.
இதற்கு செய்ய வேண்டியது:
1. உங்களுடைய வேண்டுகோள் கடிதம்: அதில் விடுநரில், நீங்கள் அப்ளிகேசனில் குறிப்பிட்ட முகவரியை பதிவு செய்தும், பெறுநரில் ஆசிரியர் தேர்வு வாரியம் , அதன் முகவரியும் குறிப்பிட்டு, உங்கள் வேண்டுகோளை எளிமையாக சுருக்கமாக குறிப்பிடவும். தவறாமல் உங்கள் தொடர்பு எண்ணை பதிவு செய்யவும்.
2. நீங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பிய அப்ளிக்கேசன் நகல்
3.நீங்கள் தேர்வு எழுத பணம் செலுத்திய சீட்டு நகல்
4.தற்போது டவுன்லோட் செய்துள்ள பிழையான ஹால் டிக்கெட் நகல்
இது அனைத்தையும் சென்னை DPI வளாகத்தில், தமிழ்நாடு பாடநூல் கழக கட்டிடத்தில் 4வது தளத்தில் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் உள்ள சிறப்பு அலுவலரை சந்தித்து நேரடியாக தரவும்.
இவ்வாறு பிழையான ஹால் டிக்கெட்டுகள் சரிசெய்யப்பட்டு ஆகஸ்ட் 13 அன்று புதிய ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் மீண்டும் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்காணும் அனைத்து தகவல்களையும் தந்து பலர் பயன்பெற உதவிய திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த திரு.முனுசாமி அவர்களுக்கு நம் தளம் சார்பாக நன்றியினை பதிவு செய்கிறோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...