மத்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் / PFRDA (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) மசோதாவை தாக்கல் செய்து நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து மத்திய அரசின் அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் விரோதப் போக்கை மத்திய அரசு பணியாளர்கள் மகாசம்மேளனம் கண்டிக்கிறது என்றும், ஆரம்பத்திலிருந்தே இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றும், இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்துள்ளது. அதேபோல் இடதுசாரி கட்சிகளும் தங்களின் பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
ஆயினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்ப்பினால் இந்த மசோதாவை திரும்ப பெற மத்திய அரசு தயாராக இல்லை. எனவே PFRDA மசோதாவை விவாதத்திற்கு எடுத்து கொள்ளும் நாளன்றோ அல்லது மறுநாளோ (தகவல் காலதாமதமாக கிடைக்கும் பட்சத்தில்) மத்திய அரசின் போக்கை எதிர்த்து நாட்டிலுள்ள அனைத்து மத்திய அரசு அலுவகங்களின் முன் இரண்டு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த மத்திய அரசு பணியாளர்களின் மகாசம்மேளனம் ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...