தமிழ்நாட்டில் 1.35 கோடி மாணவா்கள் இருப்பதாக
தகவல்.. ஒவ்வொரு மாணவனுடை விபரங்களையும் இணையதளத்தில் உள்ளீடு செய்ய Data
Entry நிறுவனங்களிடம் ஒப்படைத்திருந்தால் குறைந்தபட்சம் ஒரு மாணவருக்கு
ரூ.15 இல்லாமல் செய்யமாட்டார்கள்.
அவா்களை வேண்டுமானால் ஒரு வாரத்தில், ஒருநாளில் முடிக்க வேண்டும் என கட்டாயபடுத்தலாம்...ஆனால் தொடக்கப்பள்ளிகளில் கணினி வசதி கூட இல்லாத பள்ளிகளும் இருக்கின்றன, இணையதள வசதி முற்றிலும்கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே..
1.35கோடி *15= ரூ.20.25 கோடியை நாம் மிச்சம் செய்து கொடுக்கிறோம்(நாம் செலவு செய்து).
தற்போது திருத்தம் மற்றும் விடுபட்டதைத்தான்
செய்யச்சொல்கிறார்கள், ஆனால் ஒட்டுமொத்தமாக நம் ஆசிரியா்கள் அந்த
இணையதளத்தை திறப்பதால் அதில் தாமததுமும், NOT FOUND என்றுமே வருகிறது..
இந்தியாவிலேயே EMISல் நாம் தான சிறப்பாக
செய்திருக்கிறோம், மற்ற மாநில அரசுகள் நம்மை பாராட்டுகின்றனா், என்று
பெருமையடித்துக்கொள்பவா்கள், அதற்கு காரணமான நம்மை திங்களன்று அறிவித்து
வியாழனுக்குள் முடிக்க வேண்டும் என கட்டாயபடுத்துகிறார்கள்,
அனைத்து தலைமையாசிரிகளும் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கின்றனா்..
இதை நாம் offline-ல் செய்து கொடுத்து அதை
அவா்கள் online-ல் upload செய்திருக்கலாம், இப்படி செய்திருந்தால்
துல்லியமாகவும், யாருக்கும் எந்த தொந்தரவும் இருந்திருக்காது,..
இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கப்பட வேண்டும், அல்லது இப்பணியை Data Entry செய்யும் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேணடும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...