Home »
» இடைநிலை ஆசிரியர்களில் புதிய நியமனதாரர்களுக்கு ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே என்பதை விளக்கும் கட்டுரை.
ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.
தற்போது புதிய ஊதிய விகிதத்தினருக்கான D.A. அறிவித்த பின்னர் முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்று வருபவர்களுக்காக ஒரு அகவிலைப்படி அரசாணை வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது 80% - க்கான D.A அரசாணை வெளியிடப்பட்ட பின்னர், முந்தைய ஊதிய விகிதத்தில் ஊதியம் பெற்றுவருபவர்களுக்காக நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இல் D.A. 166% -க்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தை விட, முந்தைய ஊதிய விகிதம் (பழைய ஊதிய விகிதம்) நடைமுறையில் இருந்திருந்தாலே ஊதியம் அதிகம் இருந்திருக்கும் என்பதை விளக்கிக்காட்ட விரும்புகிறேன்.
முந்தைய ஊதிய விகிதமே இருந்திருந்தால் பெற்றிருக்கக்கூடிய ஊதியம்:
BASIC PAY = 4500
DEARNESS PAY (D.P) = 2250
D.A. 166% = 11205
___________
TOTAL 17955
____________
(D.A. நிதித்துறை அரசாணை 258 நாள்.14.5.2013 இன் படி)
ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில் ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு.
BASIC = 5200
GRADE PAY = 2800
P.P. = 750
D.A. 80% = 7000
_________
TOTAL 15750
__________
ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தால் புதிய நியமன இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பு
17955 - 15750 = 2205
எளிதில் புரிவதற்காக 1.1.2013 D.A. அரசாணையை வைத்து விளக்கியுள்ளேன். இதே போன்று 2009 முதல் 2012 வரை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி அரசாணைகளை வைத்து கணக்கிட்டு பாருங்கள். புதிய ஊதிய விகிததினருக்கு D.A.அரசானை அறிவிக்கப்பட்டு சில வாரங்களில் முந்தைய ஊதிய விகித்தினருக்கும் D.A. அரசாணை வெளியிடப்பட்டு வருகிறது.
நன்றி: கட்டுரை : திரு.Thomas Rockland
IN SIXTH PAY COMMISSION TEACHING COMMUNITY HAS BEEN BETRAYED BY THEN GOVT.ALL THE EMPLOYEES IN GOVT OF TAMILNADU GET THE EQUAL PAY.THE PGT ALSO LOSE MONEY.TO ACHIVE THE MARK JACTEA HAS TO BE FORMED
ReplyDelete