நல்லி-திசை எட்டும் சார்பில் மொழி பெயர்ப்புக்கான பாஷா பூஷண் மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா கடலூரில் நடந்தது.
விழாவில் மொழியாக்கப் படைப்பாளிக்களுக்கு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன், விருது வழங்கிப் பேசியதாவது:
மொழி பெயர்ப்பு என்பது கடினமான வேலை. அதை விட கடினம் ஒருவர் பேசுவதை மொழி பெயர்ப்பது என்பது. ஆங்கில மொழி பெயர்ப்பு என்பது கடினம் ஆங்கிலத்தில் ஒரே வாத்தைக்கு பல அர்த்தம் உள்ளது. இந்த பணியில் மாணவர்களை பங்கேற்ப செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
மொழி பெயர்ப்பு என்பது அந்த மொழியின் இலக்கியம், இடம், பொருள், சூழலைப் பொறுத்தே அமைய வேண்டும். வட மாநிலங்களில் நமது எழுத்தாளர்கள் பற்றி தெரியவில்லை. ஆனால் காண்டேகர் தெரியாத தமிழர்கள் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை.
இந்திய மொழிகளில் இரண்டு மொழிகள் தமிழில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்றால் மராட்டியம், வங்கமும்தான். பக்கத்தில் உள்ள மலையாளத்தில் இருந்துகூட அவ்வளவு மொழி பெயர்ப்பு நூல்கள் இல்லை. மொழி பெயர்ப்பு வளர வளரத்தான், ஒரு மொழிக்கு எந்தனை வகை சிறப்புகள் இருக்கிறது என்பதை அறிய முடியும்.
காலையில் ஒரு நூல் வருகிறது என்றால் அதை ஒரு வாரத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற ஆர்வம் கேரள மக்களிடம் அதிகளவு உள்ளது. அதை அவர்கள் சுலபமாக செய்து முடிக்கின்றனர். நாம் அதே நூலை 5 அல்லது 10 ஆண்டுகள் சென்ற பின்னரே மொழி பெயர்க்கிறோம்.
தமிழ் இலக்கியத்தை ஆங்கில மொழியில் மொழி பெயர்க்கும் போது மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் பன்பாட்டை விளக்கும் போது ஆங்கிலம் சில நேரத்தில் சிரமாக உள்ளது. எனவே இந்த 2 மொழிகளையும் இரு கண்களாக வைத்து எண்ணத் துவங்கினால், தமிழ் பாண்பாட்டை, இலக்கியத் திறனை உலக நாடுகளில் எல்லாம் அறியப்படுத்த முடியும். இவ்வாறு அவ்வை நடராஜன் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...