அரசு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தை தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்தில் முதலிடத்திற்கு கொண்டு வருவேன், அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்வேன்" என்று புதிய முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக (சி.இ.ஓ) பணியாற்றிய செயக்கண்ணு திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்ட சி.இ.ஓவாக பணியாற்றிய முனுசாமி தூத்துக்குடி மாவட்ட சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக இருந்த விழுப்புரம் மாவட்டத்தில் தலைமையாசிரியர்கள், கல்வி அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி மாவட்டத்தை கல்வி வளர்ச்சியில் நல்ல நிலைக்கு கொண்டுவர இவர் கடும் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. தேர்ச்சி சதவீதத்தில் 32வது இடமான அதாவது மாநிலத்தில் கடைசி இடத்தில் இருந்த விழுப்புரம் மாவட்டத்தை 29வது இடத்திற்கு கொண்டு வந்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்றார்.
இந்நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டு பொறுப்பேற்றார். புதிய சி.இ.ஓ முனுசாமி கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வு எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் இம் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதனை நிச்சயமாக வரும் ஆண்டில் முதல் இடத்திற்கு கொண்டு வருவேன். அதற்கு ஏற்ப தனது பணிகள் அமையும்." என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...