பி.எட். மதிப்பெண் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சரிசெய்து பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
பி.எட். தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு எழுதியவர்களில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் தேர்வில் பங்கேற்றபோதும் சில பாடங்களில் "ஆப்சென்ட்' போடப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் முறையிட்டனர். இதையடுத்து பட்டியல் சரிசெய்யப்பட்டது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறியது:
தேர்வு எழுதியவர்களில் சிலர் பாட குறியீடுகளை மாற்றி போட்டதாலும், தேர்வு எண்ணை முழுமையாக எழுதாததாலும் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது. இப்போது தவறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு, சரியான மதிப்பெண் பட்டியல் பல்கலைக்கழக இணையதளமான www.tnteu.in -ல் வெளியிடப்பட்டுள்ளது என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...